< Ezékiel 2 >
1 És monda nékem: Embernek fia! állj lábaidra, és szólok veled.
௧அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
2 És lélek jöve én belém, a mint szóla, és állata engem lábaimra, és hallám azt, a ki szól vala nékem.
௨இப்படி அவர் என்னுடன் பேசும்போது, தேவனுடைய ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
3 És mondá nékem: Embernek fia! küldelek én téged Izráel fiaihoz, a pártos nemzetségekhez, a kik pártot ütöttek ellenem; ők és atyáik vétkeztek ellenem mind e mai napig.
௩அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள்.
4 A kemény orczájú fiakhoz és makacs szívűekhez küldelek téged, és ezt mondjad nékik: Így szól az Úr Isten!
௪அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயம் உள்ள மக்கள்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதை சொல்கிறார் என்று அவர்களிடம் சொல்.
5 Ők pedig vagy hallják, vagy nem hallják, mivelhogy pártos ház, hadd tudják meg, hogy próféta volt köztük.
௫கலகமக்களாகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
6 Te pedig, embernek fia, ne félj tőlök, és az ő beszédöktől se félj; ha bogácsok és tövisek vannak is veled, és ha skorpiókkal lakol is együtt; beszédöktől ne félj, orczájoktól ne rettegj, mert ők pártos ház.
௬மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள்.
7 És szóljad az én beszédimet nékik, vagy hallják, vagy nem, mert pártos ház.
௭கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
8 Te pedig, embernek fia, halld meg a mit én néked szólok. Ne légy pártos mint ez a pártos ház, nyisd föl szádat, és egyed, a mit én adok néked.
௮மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.
9 És látám, és ímé egy kéz nyúlt felém, és ímé benne egy könyv türete vala.
௯அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புத்தகச்சுருள் இருந்தது.
10 És kiterjeszté azt előttem, és ímé be vala írva elől és hátul, és írva valának reá gyászénekek és nyögések és jajszók.
௧0அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.