< 5 Mózes 27 >

1 Mózes pedig és Izráel vénei parancsot adának a népnek, mondván: Tartsátok meg mind e parancsolatot, a melyet én parancsolok ma néktek.
பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: “நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2 És a mely napon általmentek a Jordánon arra a földre, a melyet az Úr, a te Istened ád néktek: nagy köveket állíts fel, és meszeld be azokat mészszel.
உன் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
3 És mihelyt általmégy, írd fel azokra e törvénynek minden ígéjét, hogy bemehess arra a földre, a melyet az Úr, a te Istened ád néked, a tejjel és mézzel folyó földre, a miképen megígérte néked az Úr, a te atyáidnak Istene.
உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்.
4 Mihelyt azért általmentek a Jordánon, állítsátok fel azokat a köveket, a melyeket én e mai napon parancsolok néktek, az Ebál hegyén; és meszeld be azokat mészszel.
மேலும் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
5 És építs ott oltárt az Úrnak, a te Istenednek; olyan kövekből való oltárt, a melyeket vassal meg ne faragj.
அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவாயாக.
6 Ép kövekből építsd az Úrnak, a te Istenednek oltárát; és áldozzál azon egészen égőáldozatokat az Úrnak, a te Istenednek.
நீ உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலிகளையும்,
7 Áldozzál hálaáldozatokat is, és egyél ott, és vigadozzál az Úr előtt, a te Istened előtt.
சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து,
8 És írd fel a kövekre e törvénynek minden ígéjét igen világosan!
அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய்” என்று கட்டளையிட்டான்.
9 És szóla Mózes és a Lévi nemzetségéből való papok az egész Izráelnek, mondván: Figyelj és hallgass Izráel! E mai napon lettél az Úrnak, a te Istenednek népévé.
பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய்.
10 Hallgass azért az Úrnak, a te Istenednek szavára, és cselekedjél az ő parancsolatai és rendelései szerint, a melyeket, én parancsolok ma néked.
௧0ஆகையால் நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்று சொன்னான்.
11 És parancsola Mózes azon a napon a népnek, mondván:
௧௧மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி:
12 Ezek álljanak fel a népnek megáldására a Garizim hegyén, mikor általmentek a Jordánon: Simeon, Lévi, Júda, Izsakhár, József és Benjámin.
௧௨“நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
13 Ezek pedig az átkozásra álljanak fel az Ebál hegyén: Rúben, Gád, Áser, Zebulon, Dán és Nafthali.
௧௩சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
14 Szóljanak pedig a léviták, és ezt mondják az egész Izráel népének felszóval:
௧௪அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து:
15 Átkozott az ember, a ki faragott és öntött képet csinál, útálatára az Úrnak, mesterember kezének munkáját, és rejtve tartja azt! És feleljen az egész nép és mondja: Ámen!
௧௫யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்வார்களாக.
16 Átkozott a ki kevésre becsüli az ő atyját vagy anyját! És mondja az egész nép: Ámen!
௧௬தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
17 Átkozott, a ki elmozdítja az ő felebarátjának határát! És mondja az egész nép: Ámen!
௧௭பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
18 Átkozott, a ki félrevezeti a vakot az úton! És mondja az egész nép: Ámen!
௧௮குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
19 Átkozott, a ki elfordítja a jövevénynek, árvának és özvegynek igazságát! És mondja az egész nép: Ámen!
௧௯அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
20 Átkozott, a ki az ő atyjának feleségével hál, mert feltakarja az ő atyjának takaróját! És mondja az egész nép: Ámen!
௨0தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
21 Átkozott, a ki közösül valamely barommal! És mondja az egész nép: Ámen!
௨௧யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
22 Átkozott, a ki az ő leánytestvérével hál, az ő atyjának leányával vagy az ő anyjának leányával! És mondja az egész nép: Ámen!
௨௨தன் தகப்பனுக்காவது தாய்க்காவது மகளாகிய தன் சகோதரியுடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
23 Átkozott, a ki az ő napával hál! És mondja az egész nép: Ámen!
௨௩தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
24 Átkozott, a ki megöli az ő felebarátját titkon! És mondja az egész nép: Ámen!
௨௪மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
25 Átkozott, a ki ajándékot fogad el, hogy ártatlan lélek vérét ontsa! És mondja az egész nép: Ámen!
௨௫குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
26 Átkozott, a ki meg nem tartja e törvénynek ígéit, hogy cselekedje azokat! És mondja az egész nép: Ámen!
௨௬இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

< 5 Mózes 27 >