< 1 Krónika 24 >
1 Az Áron fiainak is voltak rendjeik. Áron fiai: Nádáb, Abihú, Eleázár és Itamár.
௧ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
2 Nádáb és Abihú még atyjuk előtt meghaltak és fiaik nem valának, azért Eleázár és Itamár viselék a papságot.
௨நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
3 És elosztá őket Dávid és Sádók, ki az Eleázár fiai közül vala, és Ahimélek, ki az Itamár fiai közül vala, az ő tisztök szerint a szolgálatra.
௩தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.
4 Eleázár fiai között pedig több főember találtaték, mint az Itamár fiai között, mikor eloszták őket. Az Eleázár fiai között családjaik szerint tizenhat főember volt; az Itamár fiai közül, családjaik szerint, nyolcz.
௪அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.
5 Eloszták pedig őket sors által válogatás nélkül, mert a szenthelynek fejedelmei és Istennek fejedelmei valának úgy az Eleázár, mint az Itamár fiai közül valók.
௫எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
6 És beírá őket Semája, a Nétanéel fia, a Lévi nemzetségéből való íródeák, a király előtt és a fejedelmek előtt, Sádók pap előtt; Ahimélek előtt, ki Abjátár fia vala, és a papoknak és Lévitáknak családfői előtt. Egy család sorsoltatott az Eleázár és egy az Itamár nemzetségéből.
௬லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
7 Esék pedig az első sors Jojáribra; a második Jedájára;
௭முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
8 Hárimra a harmadik; Seórimra a negyedik;
௮மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
9 Málkijára az ötödik; Mijáminra a hatodik;
௯ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும்,
10 Hakkósra a hetedik; Abijára a nyolczadik;
௧0ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
11 Jésuára a kilenczedik; Sekániára a tizedik;
௧௧ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
12 Eliásibra a tizenegyedik; Jákimra a tizenkettedik;
௧௨பதினோராவது எலியாசிபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும்,
13 Huppára a tizenharmadik; Jésebeábra a tizennegyedik;
௧௩பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும்,
14 Bilgára a tizenötödik; Immérre a tizenhatodik;
௧௪பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
15 Hézirre a tizenhetedik; Hápisesre a tizennyolczadik;
௧௫பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
16 Petáhiára a tizenkilenczedik; Jéhezkelre a huszadik;
௧௬பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
17 Jákinra a huszonegyedik; Gámulra a huszonkettedik;
௧௭இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
18 Delájára a huszonharmadik; Maáziára a huszonnegyedik.
௧௮இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
19 Ez az ő hivatalos rendjök szolgálatukban, hogy bejárnának az Úr házába sorban, az ő atyjoknak Áronnak rendelése szerint, a mint megparancsolta volt néki az Úr, Izráel Istene.
௧௯இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
20 A mi Lévi többi fiait illeti: az Amrám fiai közül vala Subáel; a Subáel fiai közül Jehdéja.
௨0லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
21 A mi illeti Rehábiát: a Rehábia fiai közül Issija vala fő.
௨௧ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
22 Az Ishár fiai közül Selómót; és a Selómót fiai közül Jahát.
௨௨இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
23 A Hebron fiai közül első vala Jérija, Amárja második, Jaháziel harmadik, Jekámhám negyedik.
௨௩எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
24 Uzziel fiai: Mika; a Mika fiai közül Sámir.
௨௪ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும்,
25 Mika atyjafia Issija; Issija fiai közül Zekáriás.
௨௫மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
26 Mérári fiai: Mákhli és Músi; Jaázija fia, Bénó.
௨௬மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
27 Mérárinak Jaázijától, az ő fiától való fiai: Sohám, Zakkúr és Hibri.
௨௭மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
28 Mákhlitól vala Eleázár, és ennek nem valának fiai.
௨௮மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
29 Kistől: a Kis fiai közül való volt Jérakhméel.
௨௯கீசின் சந்ததியில் யெராமியேலும்,
30 Músi fiai: Mákhli, Eder és Jérimót. Ezek a Léviták fiai az ő családjaik szerint.
௩0மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
31 Ezek is sorsot vetének az ő atyjokfiaival az Áron fiaival együtt Dávid király előtt, Sádók és Ahimélek előtt, és a papok és Léviták családfői előtt, a fő a kisebbekkel egyformán.
௩௧இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.