< Jóel 1 >
1 Az Örökkévaló igéje, mely lett Jóélhez, Petúél fiához.
௧பெத்துவேலின் மகனாகிய யோவேலுக்கு கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய வசனம்.
2 Halljátok ezt, ti vének és figyeljetek, mind az ország lakói! Vajon történt-e ez napjaitokban, avagy őseitek napjaiban?
௨முதியோர்களே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் அனைத்துக் குடிமக்களே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் முன்னோர்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?
3 Arról regéljetek gyermekeiteknek, gyermekeitek pedig az ő gyermekeiknek, s az ő gyermekeik a jövő nemzedéknek.
௩இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.
4 A mit meghagyott a szöcske, megette a sáska, s a mit meghagyott a sáska, megette a nyaló, s a mit meghagyott a nyaló, megette a faló.
௪பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.
5 Ébredjetek, részegek és sírjatok; jajgassatok mind a borivók a must miatt, hogy elragadtatott szájatoktól.
௫மது வெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சைரசம் குடிக்கிற அனைத்து மக்களே, புது திராட்சைரசத்திற்காக அலறுங்கள்; அது உங்கள் வாயிலிருந்து அகற்றப்பட்டது.
6 Mert népség szállt az én országomra, hatalmas és szám nélkül; fogai oroszlánfogak, nőoroszlán zápjai vannak.
௬எண்ணிமுடியாத ஒரு பெரும் மக்கள்கூட்டம் என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; கொடிய சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.
7 Szőlőtőmet pusztulássá tette és fügefámat csupasszá: hántva lehántotta és eldobta, megfehéredtek a venyigéi.
௭அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
8 Keseregj, mint hajadon, ki zsákot kötött föl ifjúkorának férjéért.
௮தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும்.
9 Elragadtatott lisztáldozat és öntőáldozat az Örökkévaló házától; gyászolnak a papok, az Örökkévaló szolgálattevői.
௯உணவுபலியும் பானபலியும் யெகோவாவுடைய ஆலயத்தை விட்டு அகன்றுபோனது; யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் துக்கப்படுகிறார்கள்.
10 Elpusztíttatott a mező, gyászba borult a föld, mert elpusztíttatott a gabona – kiszáradt a must, elhervadt az olaj.
௧0வயல்வெளி பாழானது, பூமி துக்கம் கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சைரசம் வற்றிப்போனது; எண்ணெய் தீர்ந்துபோனது.
11 Megszégyenültek a földmívesek, jajgattak a vinczellérek a búza miatt és árpa miatt, mert odaveszett a mezőnek aratása.
௧௧பயிரிடும் குடிமக்களே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போனது; திராட்சைத்தோட்டக்காரர்களே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோனது.
12 A szőlőtő kiszáradt s a fügefa elhervadt, gránátfa, pálma is és almafa, mind a mező fái elszáradtak; bizony kiapadt a vígság az ember fiai közül.
௧௨திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது.
13 Övezkedjetek és tartsatok gyászt, oh papok, jajgassatok, oltárnak szolgálattevői, jöjjetek, háljatok zsákban, Istenemnek szolgálattevői; mert megvonatott Istenetek házától lisztáldozat meg öntőáldozat.
௧௩ஆசாரியர்களே, சணல் ஆடையை அணிந்து புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரர்களே, அலறுங்கள்; என் தேவனுடைய ஊழியக்காரர்களே, நீங்கள் உள்ளே நுழைந்து சணல் ஆடையை அணிந்தவர்களாக இரவு தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் உணவுபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
14 Szenteljetek böjtöt, hirdessetek gyülekezést, gyűjtsétek egybe a véneket, mind az ország lakóit, az Örökkévaló, a ti Istenetek házába, és kiáltsatok az Örökkévalóhoz.
௧௪பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.
15 Jaj az a nap! Mert közel van az Örökkévaló napja s mint pusztítás jő a Mindenhatótól.
௧௫அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.
16 Nemde szemeink láttára elragadtatott az eledel Istenünk házától – öröm és ujjongás!
௧௬நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
17 Elrothadtak a magvak göröngyeik alatt, elpusztultak a tárházak, összedőltek a pajták, mert kiszáradt a gabona.
௧௭விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போனது; பயிர் காய்ந்துபோகிறதினால் கிடங்குகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோனது.
18 Hogy nyög a barom, megzavarodtak a marhacsordák, mert nincs számukra legelő – a juhnyájak is szenvednek.
௧௮மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.
19 Hozzád, Örökkévaló, kiáltok; mert tűz emésztette a puszta tanyáit és láng lobbantotta föl mind a mező fáit.
௧௯யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்தது, நெருப்புத்தழல் தோட்டத்தின் மரங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
20 A mező vadja is bőg tehozzád mert kiapadtak a vizek medrei és tűz emésztette a. puszta tanyáit.
௨0வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போனது; நெருப்பு வனாந்திரத்தின் மேய்ச்சல்களை அழித்துப்போட்டது.