< Jób 22 >
1 Felelt a Témánbeli Elifáz és mondta:
௧அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக:
2 Istennek tesz-e hasznot az ember? Bizony önmagának tesz hasznot az eszes!
௨“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ?
3 Érdeke van-e a Mindenhatónak abban, hogy igaz vagy, avagy nyeresége, hogy gáncstalanná teszed útaidat?
௩நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
4 Vajon istenfélelmed miatt fenyít-e meg téged, száll veled ítéletedre?
௪அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
5 Nemde nagy a te rosszaságod, s nincs vége bűneidnek!
௫உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ?
6 Mert megzálogoltad testvéreidet ok nélkül, s a meztelenek ruháit lehúzod;
௬காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
7 nem adtál vizet inni az elbágyadtnak s az éhezőtől megvontad a kenyeret.
௭மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
8 S az erős kar emberéé az ország s a nagytekintetű marad benne lakónak.
௮பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
9 Özvegyeket üresen bocsátottál el s az árvák karjai összezúzattak.
௯விதவைகளை வெறுமையாக அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் கைகள் முறிக்கப்பட்டது.
10 Azért vannak körülötted tőrök, s rettegés rémít meg téged hirtelen.
௧0ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; திடீரென்று உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கச் செய்கிறது.
11 Vagy nem látod-e a sötétséget, a vízáradatot, mely téged elborít?
௧௧நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
12 Nemde Isten az ég magasságában van, s nézd a csillagok tetejét, mily magasak!
௧௨தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
13 S te azt mondod: Mit tudhat Isten, vajon sűrű ködön keresztül ítélhet-e?
௧௩நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
14 Felhő az ő rejteke s nem lát s az egek körén járkál.
௧௪அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
15 Vajon az őskor ösvényét követed-e, melyet tapostak a jogtalanság emberei?
௧௫அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
16 Kik megragadtattak idő előtt, folyammá omlott szét alapjuk;
௧௬காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
17 kik azt mondták Istennek: távozz tőlünk, s hogy mit tehet nekik a Mindenható
௧௭தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
18 holott ő megtöltötte házaikat jóval: de távol legyen tőlem a gonoszok tanácsa!
௧௮ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
19 Látják az igazak s örülnek s az ártatlan gúnyolódik rajtuk:
௧௯எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
20 bizony megsemmisült a mi támadónk, s a mi maradt tőlük, tűz emésztette meg!
௨0குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
21 Szegődjél csak hozzá s békéd lesz, az által jön reád a jó;
௨௧நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
22 fogadj csak el szájából tant és vedd mondásait szívedbe.
௨௨அவர் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
23 Ha megtérsz a Mindenhatóhoz, fölépülsz, ha eltávolítsz jogtalanságot sátradból;
௨௩நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர்.
24 s porba helyezd az érczet s patakok kavicsába az Ófir-aranyat,
௨௪அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
25 s legyen a Mindenható a te érczed s ragyogó ezüstöd neked:
௨௫அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார்.
26 akkor bizony a Mindenhatóban fogsz gyönyörködni s felemelheted Istenhez arczodat.
௨௬அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
27 Fohászkodol hozzá s ő hallgat rád a fogadalmaidat megfizetheted.
௨௭நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
28 A mely szóval határozol, az beteljesül neked, és útaid fölött világosság derült föl.
௨௮நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
29 Ha kit megaláztak s azt mondod: emelkedés! a lecsüggedt szeműt megsegíti ő;
௨௯மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
30 megmenti a nem ártatlant s megmenekül kezeid tisztasága által.
௩0குற்றமில்லாதவனையுங்கூட விடுவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினால் அவன் விடுவிக்கப்படுவான்” என்றான்.