< Jeremiás 45 >

1 Az ige, amelyet szólt Jirmejáhú próféta, Bárúkhhoz, Néríja fiához, amikor könyvbe írta e szavakat, Jirmejáhú szájából, Jehójákim, Jósijáhú fiának, Jehúda királyának negyedik évében, mondván:
யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
2 Így szól az Örökkévaló, Izrael Istene, te felőled, Barúkh.
பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
3 Azt mondtad: oh jaj nekem, hogy hozzá tett az Örökkévaló bánatot a fájdalmamhoz; elfáradtam nyögésemben és nyugalmat nem találtam!
நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.
4 Így szólj hozzá: így szól az Örökkévaló: íme amit építettem, azt lerombolom, amit elplántáltam, azt kiszakítom, és az egész földet illeti ez;
இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும்.
5 és te kérsz magadnak nagy dolgokat, ne kérj, mert íme én veszedelmet hozok minden halandóra, úgymond az Örökkévaló, de adom neked zsákmányul a lelkedet mindazon helyeken, ahová mégy.
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.

< Jeremiás 45 >