< Ézsaiás 29 >
1 Oh Ariél, Ariél, város, melyben Dávid lakozott! Adjatok hozzá évet évhez, forogjanak az ünnepek.
௧தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ, வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
2 Akkor szorongatom Ariélt és lesz jajgatás és jajdulás, és olyan lesz nekem mint Ariél.
௨அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.
3 És tábort ütök körben ellened és ostromollak fölállított haddal és fölvetek ellened sáncokat.
௩உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன்.
4 Lealacsonyítva a földből fogsz szólni és lealázva a porból hallatszik szavad; és mint a szellemidézőé lesz a földből hangod és a porból sipogni fog szavad.
௪அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும்.
5 És lesz mint a finom por ellenségeid sokasága és mint a tovaszálló polyva az erőszakosak sokasága és lesz az hamarjában, hirtelen.
௫உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும்.
6 Az Örökkévalótól a seregek urától lesz a büntetés, mennydörgéssel, földrengéssel és nagy robajjal, szélvész és vihar és emésztő tűznek lángja.
௬இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புயலினாலும், சுட்டெரிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் யெகோவாவாலே விசாரிக்கப்படுவாய்.
7 És olyan lesz, mint álom, éjjeli látomás, mind a nemzetek sokasága, amelyek Ariél ellen sereglettek, mind akik sereglenek ellene és vára ellen és akik szorongatják.
௭அரியேலின்மேல் போர்செய்கிற திரளான சகல தேசங்களும், அதின்மேலும் அதின் அரண்மேலும் போர்செய்து, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இரவுநேரத் தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.
8 És lesz, valamint álmodik az éhező, mintha ennék, de felébred és lelke üres, és valamint álmodik a szomjazó, mintha innék, de felébred s íme bágyadt és lelke elepedt olyan lesz mindazon nemzetek sokasága, amelyek Czión hegye ellen sereglettek.
௮அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.
9 Ámuljatok és bámuljatok, vakoskodjatok és vakuljatok! Részegek lettek, de nem bortól, támolyognak, de nem részegítő italtól.
௯தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
10 Mert kiöntötte rátok az Örökkévaló mély álom szellemét, lezárta szemeiteket, a, prófétákat és fejeiteket, a látókat betakarta.
௧0யெகோவா உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரச்செய்து, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரர்களாகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.
11 És olyan lett nektek minden látomás, mint a lepecsételt könyvnek szavai, melyet adnak könyvtudónak, mondva: olvasd csak ezt, ő pedig mondja: nem tudom, mert le van pecsételve;
௧௧ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் முடியாது, இது முத்திரை போடப்பட்டிருக்கிறது என்பான்.
12 és adják a könyvet olyannak, aki nem tud könyvhöz, mondva, olvasd csak ezt, ő pedig mondja: nem tudok könyvhöz.
௧௨அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புத்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.
13 És szólt az Úr: Mivelhogy e nép közeledett, szájával és ajkaival tisztelt engem, de szíve távolodott tőlem, és félelmük irántam betanított emberi parancs volt:
௧௩இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
14 ezért íme tovább is csodásan bánok a néppel, csodálatos csodásan; el fog veszni bölcseinek bölcsessége és értelmeseinek értelmessége el fog rejtőzni.
௧௪ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.
15 Jaj azoknak, akik mélyen elrejtik a tanácsot az Örökkévaló előtt, hogy sötétségben legyen a művük és azt mondták: ki lát bennünket, ki tud rólunk?
௧௫தங்கள் ஆலோசனையைக் யெகோவாவுக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ,
16 Mi ferdeség tőletek! Avagy mint az agyag, úgy tekintessék a fazekas? Hogy azt mondja a készítmény a készítőjéről: nem készített engem, és az alkotás azt mondta alkotójáról: nem értett hozzá!
௧௬ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
17 Valóban, még egy kevés – és a Libanon termőfölddé lesz, a termőföld pedig erdőnek fog tekintetni.
௧௭இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும்.
18 És meghallják ama napon a süketek a könyv szavait, és homályból és sötétségből látnak a vakok szemei.
௧௮அக்காலத்திலே செவிடர்கள் புத்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடர்களின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
19 És gyarapodnak az alázatosak az Örökkévaló által örömben és az emberek legszegényebbjei Izrael szentje által ujjonganak.
௧௯சிறுமையானவர்கள் யெகோவாவுக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
20 Mert vége van az erőszaknak és elpusztult a csúfoló és kiirtattak mind a jogtalanságra lesők;
௨0கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான்.
21 akik vétkesnek mondják az embert egy szóért és a kapuban feddőt tőrbe kerítik és semmiséggel jogát hajlítják az igaznak.
௨௧ஒரு வார்த்தைக்காக மனிதனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நியாயமில்லாமல் துரத்தி, இப்படி அக்கிரமம்செய்ய வகைதேடுகிற அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
22 Ezért így szól az Örökkévaló Jákob házáról, az aki megváltotta Ábrahámot: nem fog mostmár megszégyenülni Jákob és nem fog most már elhalványulni arca.
௨௨ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட யெகோவா யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.
23 Mert mikor meglátják gyermekei kezem művét közepében, megszentelik nevemet: szentnek mondják Jákob szentjét és félelmesnek Izrael Istenét.
௨௩அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.
24 Akkor tudnak a tévelygő lelkűek értelmet és a zúgolódók tanulságot tanulnak.
௨௪வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.