< Ézsaiás 23 >
1 Beszéd Czórról. Jajgassatok, Tarsís-hajók, mert elpusztíttatott, úgy hogy nincs ház, se bemenés; Kittím országából nyilváníttatott nekik.
௧தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2 Némuljatok el ti partnak lakói; te part, melyet Czídón kereskedői, a tengeren utazók, eltöltöttek.
௨தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.
3 És nagy vizeken a Síchór vetése, a folyam aratása volt a jövedelme, és lett a népek áruja.
௩சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.
4 Szégyenkezzél Czídón, mert szólt a tenger, a tenger erőssége, mondván: nem vajúdtam, nem szültem, és nem neveltem nagyra ifjakat, se nem magasra hajadonokat.
௪சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.
5 Amint Egyiptomba jut a hír, reszketnek, amint oda jut a Czórról való hír.
௫எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
6 Menjetek át Tarsisba, jajgassatok, partnak lakói ti!
௬கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
7 Ez-e a ti ujjongó várostok? Őskor napjaitól, az ő elejétől fogva viszik lábai, hogy távolban lakozzék.
௭ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
8 Ki határozta ezt a koronákat osztó Czór felől, melynek kereskedői fejedelmek, kalmárai a földnek előkelői.
௮கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
9 Az Örökkévaló a seregek ura határozta, hogy meggyalázza minden dísznek büszkeségét. hogy lealázza mind a földnek előkelőit.
௯சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
10 Járd be országodat, mint a folyam, Tarsis leánya, nincs többé kötelék!
௧0தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
11 Kezét kinyújtotta a tengerre, megremegtetett királyságokat; az Örökkévaló elrendelte Kánaán felől, hogy megsemmisítsék erősségeit.
௧௧யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:
12 És mondta: Nem fogsz már többé ujjongani, te megbántalmazott, Czídón szűz leánya, Kittímbe fel, menj át, ott sem lesz nyugtod.
௧௨ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
13 Íme a kaldeusok országa – ez a nép, mely nem volt Assúr alapította a puszta lakóknak, felállították tornyaikat, feldúlták palotáit, omladékká tették.
௧௩கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
14 Jajgassatok Tarsís-hajók, mert elpusztíttatott erősségtek.
௧௪தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
15 És lesz ama napon, el lesz felejtve Czór hetven évig azon egy király évei szerint; hetven év múltán úgy lesz Czórral, mint a parázna nő dala szól:
௧௫அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
16 Végy elő hárfát, kerüld meg a várost, elfelejtett parázna; szépen hárfázz, sokat dalolj, hogy megemlékezzenek rólad!
௧௬மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
17 És lesz hetven a múltán, rágondol az Örökkévaló Czórra, hogy visszatérjen paráznabéréhez; és paráználkodik mind a föld királyságaival a föld színén.
௧௭எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும்.
18 De keresete és bére szentség lesz az Örökkévaló számára, nem halmozták sem kinccsé sem készletté: hanem az Örökkévaló előtt lakóké lesz a keresete, evésre, jóllakásra és tartós ruházatra.
௧௮அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.