< 2 Sámuel 9 >
1 Mondta Dávid: Van-e még valaki, aki megmaradt Sául házából? Majd szeretetet teszek vele Jónátán kedvéért.
௧யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
2 Sául házának pedig volt egy szolgája, neve Czíba, azt elhívták Dávidhoz és szólt hozzá a király: Te vagy-e Czíba? Mondta: A te szolgád.
௨அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனான சீபா என்னும் பெயருள்ளவனைத் தாவீதிடம் அழைத்து வந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான்.
3 És mondta a király: Nincs még valaki Sául házából? Majd isteni szeretetet teszek vele. Szólt Czíba a királyhoz: Van még Jónátánnak egy béna lábú fia.
௩அப்பொழுது ராஜா: தேவனுக்காக நான் சவுலின் குடும்பத்தார்களுக்குத் தயைசெய்யும்படி அவன் குடும்பத்தார்களில் யாராவது ஒருவன் இன்னும் மீதியாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருக்கிறான் என்றான்.
4 Erre mondta neki a király: Hol van? Szólt Czíba a királyhoz: Íme ő Mákhír, Ammíél fia házában van, Ló-Debárban.
௪அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான்.
5 Odaküldött Dávid király és elhozatta öt Mákhír, Ammíél fia házából, Ló-Debárból.
௫அப்பொழுது தாவீது ராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து வரவழைத்தான்.
6 Midőn odaérkezett Mefibóset, Jónátánnak, Sául fiának a fia Dávidhoz, levetette magát arcára és leborult. És mondta Dávid: Mefibóset! Mondta: Itt a szolgád.
௬சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
7 És mondta neki Dávid: Ne félj, mert tenni fogok veled szeretetet atyád, Jónátán kedvéért, és visszaadom neked Sául atyádnak egész földbirtokát; magad pedig mindig asztalomnál eszel kenyeret.
௭தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான்.
8 Leborult és mondta: Mi a te szolgád, hogy fordultál olyan holt ebhez, mint én vagyok?
௮அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
9 Ekkor hivatta a király Czíbát, Sául szolgáját és szólt hozzá: Mindazt, ami Sáulé és egész házáé volt, az urad fiának adtam,
௯ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன்.
10 Műveld meg számára a földet, te meg fiaid és szolgáid; s amit betakarítasz, legyen urad fiáé kenyérnek, hogy egyék abból; de Mefibóset, urad fia, asztalomnál eszik mindig kenyeret. – Czíbának pedig tizenöt fia volt és húsz szolgája.
௧0எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் சாப்பிடுவான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள்.
11 Szólt Czíba a királyhoz: Egészen úgy amint parancsolja uram, a király az ő szolgájának, aképen fog cselekedni a te szolgád. – Mefibóset tehát asztalomnál eszik, mint egyike a királyfiaknak.
௧௧சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான்.
12 Mefibósetnek volt egy kisfia, neve Míkha; Czíba házának egész lakossága szolgája volt Mefibósetnek.
௧௨மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
13 Mefibóset pedig Jeruzsálemben lakott, mert a király asztalánál evett ő mindig; és ő mindkét lábára sánta volt.
௧௩மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.