< 2 Királyok 2 >
1 Történt, midőn az Örökkévaló fölvitte Élijáhút viharban az égbe, elment Élijáhú meg Elísá Gilgálból.
௧யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
2 És szólt Élijáhú Elísához: Maradj csak itt, mert az Örökkévaló Bét-Élbe küldött engem. Mondta Elísá: Él az Örökkévaló és lelked életére, nem hagylak el. Lementek hát Bét-Élbe.
௨எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
3 És kimentek a prófétafiak, kik Bét-Élben voltak, Elísához és szóltak hozzá: Tudod-e, hogy ma el akarja venni az Örökkévaló a te uradat fejedről? Mondta: Én is tudom, hallgassatok!
௩அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
4 És mondta neki Élijáhú: Elísá, maradj csak itt, mert az Örökkévaló Jerichóba küldött engem. Mondta: Él az Örökkévaló és lelked életére nem hagylak el. Oda mentek tehát Jeríchóba.
௪பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
5 És oda léptek a prófétafiak, kik Jeríchóban voltak, Elísához és szóltak hozzá: Tudod-e, hogy ma el akarja venni az Örökkévaló a te uradat fejedről? Mondta: Én is tudom, hallgassatok!
௫எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
6 És mondta neki Elijáhú: Maradj csak itt, mert az Örökkévaló a Jordánhoz küldött engem. Mondta: Él az Örökkévaló és lelked életére, nem hagylak el. Elmentek tehát mindketten.
௬பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
7 De ötven ember a prófétafiak közül ment, és megálltak átellenben messziről; ők ketten pedig megálltak a Jordán mellett.
௭தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
8 Ekkor vette Élijáhú a köpenyét, összesodorta, ráütött a vízre, ez kétfelé vált, ide és oda; és átkeltek mindketten szárazon.
௮அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள்.
9 Volt pedig, amint átkeltek, szólt Élijáhú Elísához: Kérj, mit tegyek számodra, mielőtt elvétetném tőled. Mondta Elísá: Legyen tehát szellemedből kétszeresen rajtam.
௯அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான்.
10 És mondta: Nehezet kértél! Ha majd látsz engem elvétetve tőled, legyen neked úgy ha pedig nem, nem leszen.
௧0அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான்.
11 És volt, a mint folyton mennek és beszélgetnek, íme tüzes szekerek és tüzes lovak, melyek elválasztották őket egymástól; így fölszállt Élijáhú viharban az égbe.
௧௧அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
12 És Elísá látja és így kiált föl: Atyám, atyám, Izraél szekerei ég lovasai! És nem látta őt többé. Ekkor megragadta a ruháit és szétszakította két darabra.
௧௨அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
13 És fölvette Élijáhú köpenyét, mely leesett róla; arra visszatért és megállott a Jordán partján.
௧௩பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
14 Vette Élijáhú köpenyét, mely leesett róla, ráütött a vízre és mondta: Hol az Örökkévaló, Élijáhú Istene? Ő is ráütött a vízre, az kétfelé vált, ide és oda, és átkelt Elísá.
௧௪எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
15 És látták őt a prófétafiak, kik átellenben Jeríchóban voltak, és mondták: rajta nyugszik Elijáhú szelleme Elísán. Elejébe mentek és földre borultak előtte.
௧௫எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
16 És szóltak hozzá: Íme, kérlek, van szolgáidnál ötven derék ember; hadd menjenek és keressék uradat, hátha elvitte őt az Örökkévaló szelleme és vetette őt a hegyek egyikére vagy a völgyek egyikébe. De mondta: Ne küldjetek.
௧௬இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
17 De midőn unszolták, amíg megszégyelték, mondta: Küldjetek! Küldtek tehát ötven embert, keresték három napig, de nem találták.
௧௭அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,
18 Midőn visszatértek hozzá, ő ugyanis Jeríchóban maradt, szólt hozzájuk: Nemde mondtam nektek, ne menjetek?
௧௮எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
19 És szóltak a város emberei Elísához: Íme, kérlek, a város fekvése jó, amint uram látja, de a víz rossz és a föld emberpusztító.
௧௯பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
20 Erre mondta: Hozzatok nekem új csészét és tegyetek bele sót. És hoztak neki.
௨0அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
21 Kiment a víz forrásához és belevetett sót; mondta: Így szól az Örökkévaló: Meggyógyítottam e vizet, nem lesz többé onnan halál s emberpusztítás.
௨௧அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
22 S meggyógyult a víz mind e mai napig, Elísá szava szerint, melyet szólt.
௨௨எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
23 Fölment onnan Bét-Élbe; a mint pedig fölment az úton, kis fiúk jöttek ki a városból, kicsúfolták őt és mondták neki: Jöjj föl, kopasz, jöjj föl kopasz!
௨௩அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
24 Ekkor hátrafordult, látta őket és megátkozta, az Örökkévaló nevében; erre kijött az erdőből két nőstény medve, és széthasított közülök negyvenkét gyermeket.
௨௪அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.
25 És elment onnan a Karmel hegyére; onnan pedig visszatért Sómrónba.
௨௫அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.