< שיר השירים 7 >
מה יפו פעמיך בנעלים בת נדיב חמוקי ירכיך כמו חלאים מעשה ידי אמן׃ | 1 |
௧இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் மிகவும் அழகாக இருக்கிறது; உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
שררך אגן הסהר אל יחסר המזג בטנך ערמת חטים סוגה בשושנים׃ | 2 |
௨உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
שני שדיך כשני עפרים תאמי צביה׃ | 3 |
௩உன் இரண்டு மார்பகங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
צוארך כמגדל השן עיניך ברכות בחשבון על שער בת רבים אפך כמגדל הלבנון צופה פני דמשק׃ | 4 |
௪உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
ראשך עליך ככרמל ודלת ראשך כארגמן מלך אסור ברהטים׃ | 5 |
௫உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
מה יפית ומה נעמת אהבה בתענוגים׃ | 6 |
௬மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
זאת קומתך דמתה לתמר ושדיך לאשכלות׃ | 7 |
௭உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.
אמרתי אעלה בתמר אחזה בסנסניו ויהיו נא שדיך כאשכלות הגפן וריח אפך כתפוחים׃ | 8 |
௮நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
וחכך כיין הטוב הולך לדודי למישרים דובב שפתי ישנים׃ | 9 |
௯13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி
אני לדודי ועלי תשוקתו׃ | 10 |
௧0நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.
לכה דודי נצא השדה נלינה בכפרים׃ | 11 |
௧௧வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
נשכימה לכרמים נראה אם פרחה הגפן פתח הסמדר הנצו הרמונים שם אתן את דדי לך׃ | 12 |
௧௨அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
הדודאים נתנו ריח ועל פתחינו כל מגדים חדשים גם ישנים דודי צפנתי לך׃ | 13 |
௧௩தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.