< תהילים 76 >

למנצח בנגינת מזמור לאסף שיר נודע ביהודה אלהים בישראל גדול שמו׃ 1
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
ויהי בשלם סכו ומעונתו בציון׃ 2
சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
שמה שבר רשפי קשת מגן וחרב ומלחמה סלה׃ 3
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
נאור אתה אדיר מהררי טרף׃ 4
மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
אשתוללו אבירי לב נמו שנתם ולא מצאו כל אנשי חיל ידיהם׃ 5
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
מגערתך אלהי יעקב נרדם ורכב וסוס׃ 6
யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
אתה נורא אתה ומי יעמד לפניך מאז אפך׃ 7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
משמים השמעת דין ארץ יראה ושקטה׃ 8
நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,
בקום למשפט אלהים להושיע כל ענוי ארץ סלה׃ 9
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
כי חמת אדם תודך שארית חמת תחגר׃ 10
௧0மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
נדרו ושלמו ליהוה אלהיכם כל סביביו יובילו שי למורא׃ 11
௧௧பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
יבצר רוח נגידים נורא למלכי ארץ׃ 12
௧௨பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

< תהילים 76 >