< תהילים 68 >
למנצח לדוד מזמור שיר יקום אלהים יפוצו אויביו וינוסו משנאיו מפניו׃ | 1 |
௧இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று. தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
כהנדף עשן תנדף כהמס דונג מפני אש יאבדו רשעים מפני אלהים׃ | 2 |
௨புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள்.
וצדיקים ישמחו יעלצו לפני אלהים וישישו בשמחה׃ | 3 |
௩நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
שירו לאלהים זמרו שמו סלו לרכב בערבות ביה שמו ועלזו לפניו׃ | 4 |
௪தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
אבי יתומים ודין אלמנות אלהים במעון קדשו׃ | 5 |
௫தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.
אלהים מושיב יחידים ביתה מוציא אסירים בכושרות אך סוררים שכנו צחיחה׃ | 6 |
௬தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
אלהים בצאתך לפני עמך בצעדך בישימון סלה׃ | 7 |
௭தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)
ארץ רעשה אף שמים נטפו מפני אלהים זה סיני מפני אלהים אלהי ישראל׃ | 8 |
௮பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
גשם נדבות תניף אלהים נחלתך ונלאה אתה כוננתה׃ | 9 |
௯தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
חיתך ישבו בה תכין בטובתך לעני אלהים׃ | 10 |
௧0உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
אדני יתן אמר המבשרות צבא רב׃ | 11 |
௧௧ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
מלכי צבאות ידדון ידדון ונות בית תחלק שלל׃ | 12 |
௧௨சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
אם תשכבון בין שפתים כנפי יונה נחפה בכסף ואברותיה בירקרק חרוץ׃ | 13 |
௧௩நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
בפרש שדי מלכים בה תשלג בצלמון׃ | 14 |
௧௪சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.
הר אלהים הר בשן הר גבננים הר בשן׃ | 15 |
௧௫தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.
למה תרצדון הרים גבננים ההר חמד אלהים לשבתו אף יהוה ישכן לנצח׃ | 16 |
௧௬உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.
רכב אלהים רבתים אלפי שנאן אדני בם סיני בקדש׃ | 17 |
௧௭தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார்.
עלית למרום שבית שבי לקחת מתנות באדם ואף סוררים לשכן יה אלהים׃ | 18 |
௧௮தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
ברוך אדני יום יום יעמס לנו האל ישועתנו סלה׃ | 19 |
௧௯எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)
האל לנו אל למושעות וליהוה אדני למות תוצאות׃ | 20 |
௨0நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
אך אלהים ימחץ ראש איביו קדקד שער מתהלך באשמיו׃ | 21 |
௨௧மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
אמר אדני מבשן אשיב אשיב ממצלות ים׃ | 22 |
௨௨உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
למען תמחץ רגלך בדם לשון כלביך מאיבים מנהו׃ | 23 |
௨௩என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
ראו הליכותיך אלהים הליכות אלי מלכי בקדש׃ | 24 |
௨௪தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.
קדמו שרים אחר נגנים בתוך עלמות תופפות׃ | 25 |
௨௫முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
במקהלות ברכו אלהים יהוה ממקור ישראל׃ | 26 |
௨௬இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
שם בנימן צעיר רדם שרי יהודה רגמתם שרי זבלון שרי נפתלי׃ | 27 |
௨௭அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
צוה אלהיך עזך עוזה אלהים זו פעלת לנו׃ | 28 |
௨௮உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.
מהיכלך על ירושלם לך יובילו מלכים שי׃ | 29 |
௨௯எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
גער חית קנה עדת אבירים בעגלי עמים מתרפס ברצי כסף בזר עמים קרבות יחפצו׃ | 30 |
௩0நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார்.
יאתיו חשמנים מני מצרים כוש תריץ ידיו לאלהים׃ | 31 |
௩௧பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும்.
ממלכות הארץ שירו לאלהים זמרו אדני סלה׃ | 32 |
௩௨பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
לרכב בשמי שמי קדם הן יתן בקולו קול עז׃ | 33 |
௩௩ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.
תנו עז לאלהים על ישראל גאותו ועזו בשחקים׃ | 34 |
௩௪தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
נורא אלהים ממקדשיך אל ישראל הוא נתן עז ותעצמות לעם ברוך אלהים׃ | 35 |
௩௫தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.