< תהילים 38 >
מזמור לדוד להזכיר יהוה אל בקצפך תוכיחני ובחמתך תיסרני׃ | 1 |
௧நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
כי חציך נחתו בי ותנחת עלי ידך׃ | 2 |
௨உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது.
אין מתם בבשרי מפני זעמך אין שלום בעצמי מפני חטאתי׃ | 3 |
௩உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
כי עונתי עברו ראשי כמשא כבד יכבדו ממני׃ | 4 |
௪என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
הבאישו נמקו חבורתי מפני אולתי׃ | 5 |
௫என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
נעויתי שחתי עד מאד כל היום קדר הלכתי׃ | 6 |
௬நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
כי כסלי מלאו נקלה ואין מתם בבשרי׃ | 7 |
௭என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
נפוגותי ונדכיתי עד מאד שאגתי מנהמת לבי׃ | 8 |
௮நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
אדני נגדך כל תאותי ואנחתי ממך לא נסתרה׃ | 9 |
௯ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
לבי סחרחר עזבני כחי ואור עיני גם הם אין אתי׃ | 10 |
௧0என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
אהבי ורעי מנגד נגעי יעמדו וקרובי מרחק עמדו׃ | 11 |
௧௧என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
וינקשו מבקשי נפשי ודרשי רעתי דברו הוות ומרמות כל היום יהגו׃ | 12 |
௧௨என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
ואני כחרש לא אשמע וכאלם לא יפתח פיו׃ | 13 |
௧௩நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
ואהי כאיש אשר לא שמע ואין בפיו תוכחות׃ | 14 |
௧௪காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
כי לך יהוה הוחלתי אתה תענה אדני אלהי׃ | 15 |
௧௫யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
כי אמרתי פן ישמחו לי במוט רגלי עלי הגדילו׃ | 16 |
௧௬அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
כי אני לצלע נכון ומכאובי נגדי תמיד׃ | 17 |
௧௭நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
כי עוני אגיד אדאג מחטאתי׃ | 18 |
௧௮என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
ואיבי חיים עצמו ורבו שנאי שקר׃ | 19 |
௧௯என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
ומשלמי רעה תחת טובה ישטנוני תחת רדופי טוב׃ | 20 |
௨0நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
אל תעזבני יהוה אלהי אל תרחק ממני׃ | 21 |
௨௧யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
חושה לעזרתי אדני תשועתי׃ | 22 |
௨௨என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.