< תהילים 112 >

הללו יה אשרי איש ירא את יהוה במצותיו חפץ מאד׃ 1
அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
גבור בארץ יהיה זרעו דור ישרים יברך׃ 2
அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
הון ועשר בביתו וצדקתו עמדת לעד׃ 3
செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
זרח בחשך אור לישרים חנון ורחום וצדיק׃ 4
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
טוב איש חונן ומלוה יכלכל דבריו במשפט׃ 5
இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
כי לעולם לא ימוט לזכר עולם יהיה צדיק׃ 6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
משמועה רעה לא יירא נכון לבו בטח ביהוה׃ 7
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
סמוך לבו לא יירא עד אשר יראה בצריו׃ 8
அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
פזר נתן לאביונים צדקתו עמדת לעד קרנו תרום בכבוד׃ 9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
רשע יראה וכעס שניו יחרק ונמס תאות רשעים תאבד׃ 10
௧0துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.

< תהילים 112 >