< תהילים 109 >
למנצח לדוד מזמור אלהי תהלתי אל תחרש׃ | 1 |
௧இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
כי פי רשע ופי מרמה עלי פתחו דברו אתי לשון שקר׃ | 2 |
௨துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
ודברי שנאה סבבוני וילחמוני חנם׃ | 3 |
௩பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
תחת אהבתי ישטנוני ואני תפלה׃ | 4 |
௪என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
וישימו עלי רעה תחת טובה ושנאה תחת אהבתי׃ | 5 |
௫நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
הפקד עליו רשע ושטן יעמד על ימינו׃ | 6 |
௬அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
בהשפטו יצא רשע ותפלתו תהיה לחטאה׃ | 7 |
௭அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
יהיו ימיו מעטים פקדתו יקח אחר׃ | 8 |
௮அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
יהיו בניו יתומים ואשתו אלמנה׃ | 9 |
௯அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
ונוע ינועו בניו ושאלו ודרשו מחרבותיהם׃ | 10 |
௧0அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
ינקש נושה לכל אשר לו ויבזו זרים יגיעו׃ | 11 |
௧௧கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
אל יהי לו משך חסד ואל יהי חונן ליתומיו׃ | 12 |
௧௨அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
יהי אחריתו להכרית בדור אחר ימח שמם׃ | 13 |
௧௩அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
יזכר עון אבתיו אל יהוה וחטאת אמו אל תמח׃ | 14 |
௧௪அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
יהיו נגד יהוה תמיד ויכרת מארץ זכרם׃ | 15 |
௧௫அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
יען אשר לא זכר עשות חסד וירדף איש עני ואביון ונכאה לבב למותת׃ | 16 |
௧௬அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
ויאהב קללה ותבואהו ולא חפץ בברכה ותרחק ממנו׃ | 17 |
௧௭சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
וילבש קללה כמדו ותבא כמים בקרבו וכשמן בעצמותיו׃ | 18 |
௧௮சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
תהי לו כבגד יעטה ולמזח תמיד יחגרה׃ | 19 |
௧௯அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
זאת פעלת שטני מאת יהוה והדברים רע על נפשי׃ | 20 |
௨0இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
ואתה יהוה אדני עשה אתי למען שמך כי טוב חסדך הצילני׃ | 21 |
௨௧ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
כי עני ואביון אנכי ולבי חלל בקרבי׃ | 22 |
௨௨நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
כצל כנטותו נהלכתי ננערתי כארבה׃ | 23 |
௨௩சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
ברכי כשלו מצום ובשרי כחש משמן׃ | 24 |
௨௪உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
ואני הייתי חרפה להם יראוני יניעון ראשם׃ | 25 |
௨௫நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
עזרני יהוה אלהי הושיעני כחסדך׃ | 26 |
௨௬என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
וידעו כי ידך זאת אתה יהוה עשיתה׃ | 27 |
௨௭இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
יקללו המה ואתה תברך קמו ויבשו ועבדך ישמח׃ | 28 |
௨௮அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
ילבשו שוטני כלמה ויעטו כמעיל בשתם׃ | 29 |
௨௯என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
אודה יהוה מאד בפי ובתוך רבים אהללנו׃ | 30 |
௩0யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
כי יעמד לימין אביון להושיע משפטי נפשו׃ | 31 |
௩௧தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.