< מִשְׁלֵי 8 >
הלא חכמה תקרא ותבונה תתן קולה׃ | 1 |
௧ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
בראש מרומים עלי דרך בית נתיבות נצבה׃ | 2 |
௨அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
ליד שערים לפי קרת מבוא פתחים תרנה׃ | 3 |
௩அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
אליכם אישים אקרא וקולי אל בני אדם׃ | 4 |
௪மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
הבינו פתאים ערמה וכסילים הבינו לב׃ | 5 |
௫பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
שמעו כי נגידים אדבר ומפתח שפתי מישרים׃ | 6 |
௬கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
כי אמת יהגה חכי ותועבת שפתי רשע׃ | 7 |
௭என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
בצדק כל אמרי פי אין בהם נפתל ועקש׃ | 8 |
௮என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
כלם נכחים למבין וישרים למצאי דעת׃ | 9 |
௯அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
קחו מוסרי ואל כסף ודעת מחרוץ נבחר׃ | 10 |
௧0வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
כי טובה חכמה מפנינים וכל חפצים לא ישוו בה׃ | 11 |
௧௧முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல.
אני חכמה שכנתי ערמה ודעת מזמות אמצא׃ | 12 |
௧௨ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
יראת יהוה שנאת רע גאה וגאון ודרך רע ופי תהפכות שנאתי׃ | 13 |
௧௩தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
לי עצה ותושיה אני בינה לי גבורה׃ | 14 |
௧௪ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
בי מלכים ימלכו ורוזנים יחקקו צדק׃ | 15 |
௧௫என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
בי שרים ישרו ונדיבים כל שפטי צדק׃ | 16 |
௧௬என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
אני אהביה אהב ומשחרי ימצאנני׃ | 17 |
௧௭என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
עשר וכבוד אתי הון עתק וצדקה׃ | 18 |
௧௮செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
טוב פריי מחרוץ ומפז ותבואתי מכסף נבחר׃ | 19 |
௧௯பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
בארח צדקה אהלך בתוך נתיבות משפט׃ | 20 |
௨0என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
להנחיל אהבי יש ואצרתיהם אמלא׃ | 21 |
௨௧அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
יהוה קנני ראשית דרכו קדם מפעליו מאז׃ | 22 |
௨௨யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
מעולם נסכתי מראש מקדמי ארץ׃ | 23 |
௨௩பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
באין תהמות חוללתי באין מעינות נכבדי מים׃ | 24 |
௨௪ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
בטרם הרים הטבעו לפני גבעות חוללתי׃ | 25 |
௨௫மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
עד לא עשה ארץ וחוצות וראש עפרות תבל׃ | 26 |
௨௬அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன்.
בהכינו שמים שם אני בחוקו חוג על פני תהום׃ | 27 |
௨௭அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,
באמצו שחקים ממעל בעזוז עינות תהום׃ | 28 |
௨௮உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
בשומו לים חקו ומים לא יעברו פיו בחוקו מוסדי ארץ׃ | 29 |
௨௯சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
ואהיה אצלו אמון ואהיה שעשעים יום יום משחקת לפניו בכל עת׃ | 30 |
௩0நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
משחקת בתבל ארצו ושעשעי את בני אדם׃ | 31 |
௩௧அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
ועתה בנים שמעו לי ואשרי דרכי ישמרו׃ | 32 |
௩௨ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
שמעו מוסר וחכמו ואל תפרעו׃ | 33 |
௩௩நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள்.
אשרי אדם שמע לי לשקד על דלתתי יום יום לשמר מזוזת פתחי׃ | 34 |
௩௪என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
כי מצאי מצאי חיים ויפק רצון מיהוה׃ | 35 |
௩௫என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
וחטאי חמס נפשו כל משנאי אהבו מות׃ | 36 |
௩௬எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.