< מִשְׁלֵי 5 >
בני לחכמתי הקשיבה לתבונתי הט אזנך׃ | 1 |
என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
לשמר מזמות ודעת שפתיך ינצרו׃ | 2 |
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
כי נפת תטפנה שפתי זרה וחלק משמן חכה׃ | 3 |
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
ואחריתה מרה כלענה חדה כחרב פיות׃ | 4 |
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
רגליה ירדות מות שאול צעדיה יתמכו׃ (Sheol ) | 5 |
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol )
ארח חיים פן תפלס נעו מעגלתיה לא תדע׃ | 6 |
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
ועתה בנים שמעו לי ואל תסורו מאמרי פי׃ | 7 |
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
הרחק מעליה דרכך ואל תקרב אל פתח ביתה׃ | 8 |
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
פן תתן לאחרים הודך ושנתיך לאכזרי׃ | 9 |
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
פן ישבעו זרים כחך ועצביך בבית נכרי׃ | 10 |
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
ונהמת באחריתך בכלות בשרך ושארך׃ | 11 |
உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
ואמרת איך שנאתי מוסר ותוכחת נאץ לבי׃ | 12 |
அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
ולא שמעתי בקול מורי ולמלמדי לא הטיתי אזני׃ | 13 |
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
כמעט הייתי בכל רע בתוך קהל ועדה׃ | 14 |
நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
שתה מים מבורך ונזלים מתוך בארך׃ | 15 |
நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
יפוצו מעינתיך חוצה ברחבות פלגי מים׃ | 16 |
உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
יהיו לך לבדך ואין לזרים אתך׃ | 17 |
அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
יהי מקורך ברוך ושמח מאשת נעורך׃ | 18 |
உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
אילת אהבים ויעלת חן דדיה ירוך בכל עת באהבתה תשגה תמיד׃ | 19 |
அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
ולמה תשגה בני בזרה ותחבק חק נכריה׃ | 20 |
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
כי נכח עיני יהוה דרכי איש וכל מעגלתיו מפלס׃ | 21 |
மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
עוונותיו ילכדנו את הרשע ובחבלי חטאתו יתמך׃ | 22 |
கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
הוא ימות באין מוסר וברב אולתו ישגה׃ | 23 |
அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.