< מִשְׁלֵי 28 >
נסו ואין רדף רשע וצדיקים ככפיר יבטח׃ | 1 |
௧ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
בפשע ארץ רבים שריה ובאדם מבין ידע כן יאריך׃ | 2 |
௨தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
גבר רש ועשק דלים מטר סחף ואין לחם׃ | 3 |
௩ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.
עזבי תורה יהללו רשע ושמרי תורה יתגרו בם׃ | 4 |
௪வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.
אנשי רע לא יבינו משפט ומבקשי יהוה יבינו כל׃ | 5 |
௫துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள்.
טוב רש הולך בתמו מעקש דרכים והוא עשיר׃ | 6 |
௬இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.
נוצר תורה בן מבין ורעה זוללים יכלים אביו׃ | 7 |
௭வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
מרבה הונו בנשך ובתרבית לחונן דלים יקבצנו׃ | 8 |
௮அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
מסיר אזנו משמע תורה גם תפלתו תועבה׃ | 9 |
௯வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
משגה ישרים בדרך רע בשחותו הוא יפול ותמימים ינחלו טוב׃ | 10 |
௧0உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
חכם בעיניו איש עשיר ודל מבין יחקרנו׃ | 11 |
௧௧செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
בעלץ צדיקים רבה תפארת ובקום רשעים יחפש אדם׃ | 12 |
௧௨நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
מכסה פשעיו לא יצליח ומודה ועזב ירחם׃ | 13 |
௧௩தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.
אשרי אדם מפחד תמיד ומקשה לבו יפול ברעה׃ | 14 |
௧௪எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
ארי נהם ודב שוקק משל רשע על עם דל׃ | 15 |
௧௫ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.
נגיד חסר תבונות ורב מעשקות שנאי בצע יאריך ימים׃ | 16 |
௧௬தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
אדם עשק בדם נפש עד בור ינוס אל יתמכו בו׃ | 17 |
௧௭இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
הולך תמים יושע ונעקש דרכים יפול באחת׃ | 18 |
௧௮உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
עבד אדמתו ישבע לחם ומרדף רקים ישבע ריש׃ | 19 |
௧௯தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
איש אמונות רב ברכות ואץ להעשיר לא ינקה׃ | 20 |
௨0உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
הכר פנים לא טוב ועל פת לחם יפשע גבר׃ | 21 |
௨௧பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.
נבהל להון איש רע עין ולא ידע כי חסר יבאנו׃ | 22 |
௨௨பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.
מוכיח אדם אחרי חן ימצא ממחליק לשון׃ | 23 |
௨௩தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
גוזל אביו ואמו ואמר אין פשע חבר הוא לאיש משחית׃ | 24 |
௨௪தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.
רחב נפש יגרה מדון ובוטח על יהוה ידשן׃ | 25 |
௨௫பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.
בוטח בלבו הוא כסיל והולך בחכמה הוא ימלט׃ | 26 |
௨௬தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
נותן לרש אין מחסור ומעלים עיניו רב מארות׃ | 27 |
௨௭தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
בקום רשעים יסתר אדם ובאבדם ירבו צדיקים׃ | 28 |
௨௮துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.