< איכה 3 >
אני הגבר ראה עני בשבט עברתו׃ | 1 |
அவருடைய கோபத்தின் பிரம்பினால் உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
אותי נהג וילך חשך ולא אור׃ | 2 |
அவர் என்னை வெளியே துரத்தி, வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார்.
אך בי ישב יהפך ידו כל היום׃ | 3 |
உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் அவர் தமது கையை என்மேல் திருப்பினார்.
בלה בשרי ועורי שבר עצמותי׃ | 4 |
எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், என் எலும்புகளையும் உடைத்துவிட்டார்.
בנה עלי ויקף ראש ותלאה׃ | 5 |
அவர், கசப்பும் கஷ்டமும் முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
במחשכים הושיבני כמתי עולם׃ | 6 |
வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
גדר בעדי ולא אצא הכביד נחשתי׃ | 7 |
நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார்.
גם כי אזעק ואשוע שתם תפלתי׃ | 8 |
நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார்.
גדר דרכי בגזית נתיבתי עוה׃ | 9 |
செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
דב ארב הוא לי אריה במסתרים׃ | 10 |
பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும்,
דרכי סורר ויפשחני שמני שמם׃ | 11 |
அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.
דרך קשתו ויציבני כמטרא לחץ׃ | 12 |
அவர் தம்முடைய வில்லை வளைத்து, தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
הביא בכליותי בני אשפתו׃ | 13 |
அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
הייתי שחק לכל עמי נגינתם כל היום׃ | 14 |
நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள்.
השביעני במרורים הרוני לענה׃ | 15 |
அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார்.
ויגרס בחצץ שני הכפישני באפר׃ | 16 |
அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
ותזנח משלום נפשי נשיתי טובה׃ | 17 |
நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
ואמר אבד נצחי ותוחלתי מיהוה׃ | 18 |
ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
זכר עניי ומרודי לענה וראש׃ | 19 |
நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
זכור תזכור ותשיח עלי נפשי׃ | 20 |
நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
זאת אשיב אל לבי על כן אוחיל׃ | 21 |
ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:
חסדי יהוה כי לא תמנו כי לא כלו רחמיו׃ | 22 |
அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
חדשים לבקרים רבה אמונתך׃ | 23 |
உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது.
חלקי יהוה אמרה נפשי על כן אוחיל לו׃ | 24 |
நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
טוב יהוה לקוו לנפש תדרשנו׃ | 25 |
யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
טוב ויחיל ודומם לתשועת יהוה׃ | 26 |
எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பது நல்லது.
טוב לגבר כי ישא על בנעוריו׃ | 27 |
இளைஞனாய் இருக்கும்போதே அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது.
ישב בדד וידם כי נטל עליו׃ | 28 |
யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
יתן בעפר פיהו אולי יש תקוה׃ | 29 |
அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
יתן למכהו לחי ישבע בחרפה׃ | 30 |
அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
כי לא יזנח לעולם אדני׃ | 31 |
ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
כי אם הוגה ורחם כרב חסדו׃ | 32 |
அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
כי לא ענה מלבו ויגה בני איש׃ | 33 |
அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
לדכא תחת רגליו כל אסירי ארץ׃ | 34 |
நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் கால்களின்கீழ் மிதிப்பதையும்,
להטות משפט גבר נגד פני עליון׃ | 35 |
ஒருவனின் மனித உரிமைகளை மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும்,
לעות אדם בריבו אדני לא ראה׃ | 36 |
ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் யெகோவா காணாதிருப்பாரோ?
מי זה אמר ותהי אדני לא צוה׃ | 37 |
யெகோவா உத்தரவிடாவிட்டால், எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்?
מפי עליון לא תצא הרעות והטוב׃ | 38 |
பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
מה יתאונן אדם חי גבר על חטאו׃ | 39 |
வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
נחפשה דרכינו ונחקרה ונשובה עד יהוה׃ | 40 |
ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம்.
נשא לבבנו אל כפים אל אל בשמים׃ | 41 |
எங்கள் இருதயங்களையும், கைகளையும் பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி:
נחנו פשענו ומרינו אתה לא סלחת׃ | 42 |
“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், நீர் எங்களை மன்னிக்கவில்லை.
סכתה באף ותרדפנו הרגת לא חמלת׃ | 43 |
“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
סכותה בענן לך מעבור תפלה׃ | 44 |
மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது.
סחי ומאוס תשימנו בקרב העמים׃ | 45 |
நீர் எங்களை நாடுகளுக்குள் குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
פצו עלינו פיהם כל איבינו׃ | 46 |
“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
פחד ופחת היה לנו השאת והשבר׃ | 47 |
எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.”
פלגי מים תרד עיני על שבר בת עמי׃ | 48 |
என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது.
עיני נגרה ולא תדמה מאין הפגות׃ | 49 |
என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.
עד ישקיף וירא יהוה משמים׃ | 50 |
பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும்.
עיני עוללה לנפשי מכל בנות עירי׃ | 51 |
என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது.
צוד צדוני כצפור איבי חנם׃ | 52 |
காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள்.
צמתו בבור חיי וידו אבן בי׃ | 53 |
அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
צפו מים על ראשי אמרתי נגזרתי׃ | 54 |
வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன்.
קראתי שמך יהוה מבור תחתיות׃ | 55 |
யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன்.
קולי שמעת אל תעלם אזנך לרוחתי לשועתי׃ | 56 |
“ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர்.
קרבת ביום אקראך אמרת אל תירא׃ | 57 |
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர்.
רבת אדני ריבי נפשי גאלת חיי׃ | 58 |
யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
ראיתה יהוה עותתי שפטה משפטי׃ | 59 |
யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்!
ראיתה כל נקמתם כל מחשבתם לי׃ | 60 |
அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.
שמעת חרפתם יהוה כל מחשבתם עלי׃ | 61 |
யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
שפתי קמי והגיונם עלי כל היום׃ | 62 |
அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
שבתם וקימתם הביטה אני מנגינתם׃ | 63 |
அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
תשיב להם גמול יהוה כמעשה ידיהם׃ | 64 |
யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
תתן להם מגנת לב תאלתך להם׃ | 65 |
அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
תרדף באף ותשמידם מתחת שמי יהוה׃ | 66 |
கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.