< יונה 2 >

ויתפלל יונה אל יהוה אלהיו ממעי הדגה׃ 1
அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து:
ויאמר קראתי מצרה לי אל יהוה ויענני מבטן שאול שועתי שמעת קולי׃ (Sheol h7585) 2
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். (Sheol h7585)
ותשליכני מצולה בלבב ימים ונהר יסבבני כל משבריך וגליך עלי עברו׃ 3
கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
ואני אמרתי נגרשתי מנגד עיניך אך אוסיף להביט אל היכל קדשך׃ 4
நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
אפפוני מים עד נפש תהום יסבבני סוף חבוש לראשי׃ 5
தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
לקצבי הרים ירדתי הארץ ברחיה בעדי לעולם ותעל משחת חיי יהוה אלהי׃ 6
மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
בהתעטף עלי נפשי את יהוה זכרתי ותבוא אליך תפלתי אל היכל קדשך׃ 7
என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
משמרים הבלי שוא חסדם יעזבו׃ 8
பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
ואני בקול תודה אזבחה לך אשר נדרתי אשלמה ישועתה ליהוה׃ 9
நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.
ויאמר יהוה לדג ויקא את יונה אל היבשה׃ 10
௧0யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.

< יונה 2 >