< איוב 9 >
אמנם ידעתי כי כן ומה יצדק אנוש עם אל׃ | 2 |
௨“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?
אם יחפץ לריב עמו לא יעננו אחת מני אלף׃ | 3 |
௩அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
חכם לבב ואמיץ כח מי הקשה אליו וישלם׃ | 4 |
௪அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
המעתיק הרים ולא ידעו אשר הפכם באפו׃ | 5 |
௫அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
המרגיז ארץ ממקומה ועמודיה יתפלצון׃ | 6 |
௬பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
האמר לחרס ולא יזרח ובעד כוכבים יחתם׃ | 7 |
௭அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
נטה שמים לבדו ודורך על במתי ים׃ | 8 |
௮அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
עשה עש כסיל וכימה וחדרי תמן׃ | 9 |
௯அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
עשה גדלות עד אין חקר ונפלאות עד אין מספר׃ | 10 |
௧0ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
הן יעבר עלי ולא אראה ויחלף ולא אבין לו׃ | 11 |
௧௧இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைப் பார்க்கமுடியவில்லை; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியவில்லை.
הן יחתף מי ישיבנו מי יאמר אליו מה תעשה׃ | 12 |
௧௨இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
אלוה לא ישיב אפו תחתו שחחו עזרי רהב׃ | 13 |
௧௩தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
אף כי אנכי אעננו אבחרה דברי עמו׃ | 14 |
௧௪இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவருடன் வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளவும் நான் எம்மாத்திரம்?
אשר אם צדקתי לא אענה למשפטי אתחנן׃ | 15 |
௧௫நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்காகக் கெஞ்சுவேன்.
אם קראתי ויענני לא אאמין כי יאזין קולי׃ | 16 |
௧௬நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.
אשר בשערה ישופני והרבה פצעי חנם׃ | 17 |
௧௭அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
לא יתנני השב רוחי כי ישבעני ממררים׃ | 18 |
௧௮நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
אם לכח אמיץ הנה ואם למשפט מי יועידני׃ | 19 |
௧௯பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
אם אצדק פי ירשיעני תם אני ויעקשני׃ | 20 |
௨0நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
תם אני לא אדע נפשי אמאס חיי׃ | 21 |
௨௧நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் வாழ்க்கையை வெறுப்பேன்.
אחת היא על כן אמרתי תם ורשע הוא מכלה׃ | 22 |
௨௨ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
אם שוט ימית פתאם למסת נקים ילעג׃ | 23 |
௨௩வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
ארץ נתנה ביד רשע פני שפטיה יכסה אם לא אפוא מי הוא׃ | 24 |
௨௪உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார்.
וימי קלו מני רץ ברחו לא ראו טובה׃ | 25 |
௨௫என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.
חלפו עם אניות אבה כנשר יטוש עלי אכל׃ | 26 |
௨௬அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
אם אמרי אשכחה שיחי אעזבה פני ואבליגה׃ | 27 |
௨௭என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
יגרתי כל עצבתי ידעתי כי לא תנקני׃ | 28 |
௨௮என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
אנכי ארשע למה זה הבל איגע׃ | 29 |
௨௯நான் பொல்லாதவனாயிருந்தால், வீணாகப் போராடவேண்டியது என்ன?
אם התרחצתי במו שלג והזכותי בבר כפי׃ | 30 |
௩0நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
אז בשחת תטבלני ותעבוני שלמותי׃ | 31 |
௩௧நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் உடையே என்னை அருவருக்கும்.
כי לא איש כמני אעננו נבוא יחדו במשפט׃ | 32 |
௩௨நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
לא יש בינינו מוכיח ישת ידו על שנינו׃ | 33 |
௩௩எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.
יסר מעלי שבטו ואמתו אל תבעתני׃ | 34 |
௩௪அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
אדברה ולא איראנו כי לא כן אנכי עמדי׃ | 35 |
௩௫அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.