< איוב 31 >
ברית כרתי לעיני ומה אתבונן על בתולה׃ | 1 |
௧என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி?
ומה חלק אלוה ממעל ונחלת שדי ממרמים׃ | 2 |
௨அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ?
הלא איד לעול ונכר לפעלי און׃ | 3 |
௩மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும்.
הלא הוא יראה דרכי וכל צעדי יספור׃ | 4 |
௪அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் கணக்கிடுகிறார் அல்லவோ?
אם הלכתי עם שוא ותחש על מרמה רגלי׃ | 5 |
௫நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,
ישקלני במאזני צדק וידע אלוה תמתי׃ | 6 |
௬சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
אם תטה אשרי מני הדרך ואחר עיני הלך לבי ובכפי דבק מאום׃ | 7 |
௭என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால்,
אזרעה ואחר יאכל וצאצאי ישרשו׃ | 8 |
௮அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.
אם נפתה לבי על אשה ועל פתח רעי ארבתי׃ | 9 |
௯என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,
תטחן לאחר אשתי ועליה יכרעון אחרין׃ | 10 |
௧0அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
כי הוא זמה והיא עון פלילים׃ | 11 |
௧௧அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.
כי אש היא עד אבדון תאכל ובכל תבואתי תשרש׃ | 12 |
௧௨அது பாதாளம்வரை எரிக்கும் நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும்.
אם אמאס משפט עבדי ואמתי ברבם עמדי׃ | 13 |
௧௩என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால்,
ומה אעשה כי יקום אל וכי יפקד מה אשיבנו׃ | 14 |
௧௪தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன்.
הלא בבטן עשני עשהו ויכננו ברחם אחד׃ | 15 |
௧௫தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டாக்கியவர் அவனையும் உண்டாக்கினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?
אם אמנע מחפץ דלים ועיני אלמנה אכלה׃ | 16 |
௧௬ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,
ואכל פתי לבדי ולא אכל יתום ממנה׃ | 17 |
௧௭தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
כי מנעורי גדלני כאב ומבטן אמי אנחנה׃ | 18 |
௧௮என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன்.
אם אראה אובד מבלי לבוש ואין כסות לאביון׃ | 19 |
௧௯ஒருவன் உடையில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு அணிய ஆடையில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
אם לא ברכוני חלצו ומגז כבשי יתחמם׃ | 20 |
௨0அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,
אם הניפותי על יתום ידי כי אראה בשער עזרתי׃ | 21 |
௨௧ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாக என் கையை நீட்டினதும் உண்டானால்,
כתפי משכמה תפול ואזרעי מקנה תשבר׃ | 22 |
௨௨என் கை தோள்பட்டையிலிருந்து விலகி, என் கையின் எலும்பு முறிந்துபோவதாக.
כי פחד אלי איד אל ומשאתו לא אוכל׃ | 23 |
௨௩தேவன் தண்டிப்பார் என்றும், அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
אם שמתי זהב כסלי ולכתם אמרתי מבטחי׃ | 24 |
௨௪நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
אם אשמח כי רב חילי וכי כביר מצאה ידי׃ | 25 |
௨௫என் செல்வம் அதிகமென்றும், என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
אם אראה אור כי יהל וירח יקר הלך׃ | 26 |
௨௬சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
ויפת בסתר לבי ותשק ידי לפי׃ | 27 |
௨௭என் மனம் இரகசியமாக மயங்கி, என் வாய் என் கையை முத்தம் செய்ததுண்டானால்,
גם הוא עון פלילי כי כחשתי לאל ממעל׃ | 28 |
௨௮இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
אם אשמח בפיד משנאי והתעררתי כי מצאו רע׃ | 29 |
௨௯என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?
ולא נתתי לחטא חכי לשאל באלה נפשו׃ | 30 |
௩0அவன் உயிருக்குச் சாபத்தைக் கொடுக்க விரும்பி, வாயினால் பாவம் செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
אם לא אמרו מתי אהלי מי יתן מבשרו לא נשבע׃ | 31 |
௩௧அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ?
בחוץ לא ילין גר דלתי לארח אפתח׃ | 32 |
௩௨அந்நியர் வீதியிலே இரவு தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
אם כסיתי כאדם פשעי לטמון בחבי עוני׃ | 33 |
௩௩நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?
כי אערוץ המון רבה ובוז משפחות יחתני ואדם לא אצא פתח׃ | 34 |
௩௪மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ?
מי יתן לי שמע לי הן תוי שדי יענני וספר כתב איש ריבי׃ | 35 |
௩௫ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
אם לא על שכמי אשאנו אענדנו עטרות לי׃ | 36 |
௩௬அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாக அணிந்துகொள்வேனே.
מספר צעדי אגידנו כמו נגיד אקרבנו׃ | 37 |
௩௭அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
אם עלי אדמתי תזעק ויחד תלמיה יבכיון׃ | 38 |
௩௮எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், அதின் வரப்புகள்கூட அழுகிறதும்,
אם כחה אכלתי בלי כסף ונפש בעליה הפחתי׃ | 39 |
௩௯கூலிகொடுக்காமல் நான் அதின் பலனைச் சாப்பிட்டு, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
תחת חטה יצא חוח ותחת שערה באשה תמו דברי איוב׃ | 40 |
௪0அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்” என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.