< איוב 27 >
ויסף איוב שאת משלו ויאמר׃ | 1 |
௧யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
חי אל הסיר משפטי ושדי המר נפשי׃ | 2 |
௨“என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை,
כי כל עוד נשמתי בי ורוח אלוה באפי׃ | 3 |
௩என் உதடுகள் அநீதியைச் சொல்வதுமில்லை; என் நாக்கு பொய் பேசுவதுமில்லையென்று,
אם תדברנה שפתי עולה ולשוני אם יהגה רמיה׃ | 4 |
௪என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
חלילה לי אם אצדיק אתכם עד אגוע לא אסיר תמתי ממני׃ | 5 |
௫நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன்.
בצדקתי החזקתי ולא ארפה לא יחרף לבבי מימי׃ | 6 |
௬என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.
יהי כרשע איבי ומתקוממי כעול׃ | 7 |
௭என் பகைவன் ஆகாதவனைப்போலவும், எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக.
כי מה תקות חנף כי יבצע כי ישל אלוה נפשו׃ | 8 |
௮அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன?
הצעקתו ישמע אל כי תבוא עליו צרה׃ | 9 |
௯ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ?
אם על שדי יתענג יקרא אלוה בכל עת׃ | 10 |
௧0அவன் சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
אורה אתכם ביד אל אשר עם שדי לא אכחד׃ | 11 |
௧௧தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
הן אתם כלכם חזיתם ולמה זה הבל תהבלו׃ | 12 |
௧௨இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
זה חלק אדם רשע עם אל ונחלת עריצים משדי יקחו׃ | 13 |
௧௩பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
אם ירבו בניו למו חרב וצאצאיו לא ישבעו לחם׃ | 14 |
௧௪அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
שרידו במות יקברו ואלמנתיו לא תבכינה׃ | 15 |
௧௫அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை.
אם יצבר כעפר כסף וכחמר יכין מלבוש׃ | 16 |
௧௬அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும்,
יכין וצדיק ילבש וכסף נקי יחלק׃ | 17 |
௧௭அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
בנה כעש ביתו וכסכה עשה נצר׃ | 18 |
௧௮அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும்.
עשיר ישכב ולא יאסף עיניו פקח ואיננו׃ | 19 |
௧௯அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
תשיגהו כמים בלהות לילה גנבתו סופה׃ | 20 |
௨0வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
ישאהו קדים וילך וישערהו ממקמו׃ | 21 |
௨௧கிழக்குக்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவனுடைய இடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
וישלך עליו ולא יחמל מידו ברוח יברח׃ | 22 |
௨௨அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;
ישפק עלימו כפימו וישרק עליו ממקמו׃ | 23 |
௨௩மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.