< איוב 20 >
௧அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக:
לכן שעפי ישיבוני ובעבור חושי בי׃ | 2 |
௨“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் நான் விரைவாகச் சொல்லுகிறேன்.
מוסר כלמתי אשמע ורוח מבינתי יענני׃ | 3 |
௩நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது.
הזאת ידעת מני עד מני שים אדם עלי ארץ׃ | 4 |
௪துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிடம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
כי רננת רשעים מקרוב ושמחת חנף עדי רגע׃ | 5 |
௫அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
אם יעלה לשמים שיאו וראשו לעב יגיע׃ | 6 |
௬அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்வரை எட்டினாலும்,
כגללו לנצח יאבד ראיו יאמרו איו׃ | 7 |
௭அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
כחלום יעוף ולא ימצאוהו וידד כחזיון לילה׃ | 8 |
௮அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
עין שזפתו ולא תוסיף ולא עוד תשורנו מקומו׃ | 9 |
௯அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த இடம் இனி அவனைக் காண்பதில்லை.
בניו ירצו דלים וידיו תשבנה אונו׃ | 10 |
௧0அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
עצמותיו מלאו עלומו ועמו על עפר תשכב׃ | 11 |
௧௧அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
אם תמתיק בפיו רעה יכחידנה תחת לשונו׃ | 12 |
௧௨பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
יחמל עליה ולא יעזבנה וימנענה בתוך חכו׃ | 13 |
௧௩அதை விடாமல் அடக்கி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
לחמו במעיו נהפך מרורת פתנים בקרבו׃ | 14 |
௧௪அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும்.
חיל בלע ויקאנו מבטנו יורשנו אל׃ | 15 |
௧௫அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
ראש פתנים יינק תהרגהו לשון אפעה׃ | 16 |
௧௬அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
אל ירא בפלגות נהרי נחלי דבש וחמאה׃ | 17 |
௧௭தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
משיב יגע ולא יבלע כחיל תמורתו ולא יעלס׃ | 18 |
௧௮தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் செல்வத்திற்குச் சரியாயிருக்கும்; அவன் மகிழ்ச்சியில்லாதிருப்பான்.
כי רצץ עזב דלים בית גזל ולא יבנהו׃ | 19 |
௧௯அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும்,
כי לא ידע שלו בבטנו בחמודו לא ימלט׃ | 20 |
௨0தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும், அவன் விரும்பின காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
אין שריד לאכלו על כן לא יחיל טובו׃ | 21 |
௨௧அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவனுடைய செல்வம் நிலைநிற்பதில்லை.
במלאות שפקו יצר לו כל יד עמל תבואנו׃ | 22 |
௨௨அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வேதனை உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
יהי למלא בטנו ישלח בו חרון אפו וימטר עלימו בלחומו׃ | 23 |
௨௩தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் கடுமையை வரவழைத்து, அவன் சாப்பிடும்போது, அதை அவன்மேல் வரச்செய்வார்.
יברח מנשק ברזל תחלפהו קשת נחושה׃ | 24 |
௨௪இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
שלף ויצא מגוה וברק ממררתו יהלך עליו אמים׃ | 25 |
௨௫உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
כל חשך טמון לצפוניו תאכלהו אש לא נפח ירע שריד באהלו׃ | 26 |
௨௬அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அணையாத நெருப்பு அவனை எரிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் பாடு அநுபவிப்பான்.
יגלו שמים עונו וארץ מתקוממה לו׃ | 27 |
௨௭வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
יגל יבול ביתו נגרות ביום אפו׃ | 28 |
௨௮வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்; தேவனுடைய கோபம் வெள்ளம் போல் அவைகள் மேல் ஊற்றப்படும் கரைந்து போகும்.
זה חלק אדם רשע מאלהים ונחלת אמרו מאל׃ | 29 |
௨௯இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.