< איוב 11 >
௧அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:
הרב דברים לא יענה ואם איש שפתים יצדק׃ | 2 |
௨“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ?
בדיך מתים יחרישו ותלעג ואין מכלם׃ | 3 |
௩உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
ותאמר זך לקחי ובר הייתי בעיניך׃ | 4 |
௪என் சொல் சுத்தம் என்றும், நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
ואולם מי יתן אלוה דבר ויפתח שפתיו עמך׃ | 5 |
௫ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து,
ויגד לך תעלמות חכמה כי כפלים לתושיה ודע כי ישה לך אלוה מעונך׃ | 6 |
௬உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
החקר אלוה תמצא אם עד תכלית שדי תמצא׃ | 7 |
௭தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ?
גבהי שמים מה תפעל עמקה משאול מה תדע׃ (Sheol ) | 8 |
௮அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன? (Sheol )
ארכה מארץ מדה ורחבה מני ים׃ | 9 |
௯அதின் அளவு பூமியைவிட நீளமும், சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது.
אם יחלף ויסגיר ויקהיל ומי ישיבנו׃ | 10 |
௧0அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடை செய்கிறவன் யார்?
כי הוא ידע מתי שוא וירא און ולא יתבונן׃ | 11 |
௧௧மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனிக்காமல் இருப்பாரோ?
ואיש נבוב ילבב ועיר פרא אדם יולד׃ | 12 |
௧௨புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், அறிவுள்ளவனாக இருக்கிறான்.
אם אתה הכינות לבך ופרשת אליו כפך׃ | 13 |
௧௩நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
אם און בידך הרחיקהו ואל תשכן באהליך עולה׃ | 14 |
௧௪உம்முடைய கையிலே அநீதி இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும்.
כי אז תשא פניך ממום והיית מצק ולא תירא׃ | 15 |
௧௫அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர்.
כי אתה עמל תשכח כמים עברו תזכר׃ | 16 |
௧௬அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
ומצהרים יקום חלד תעפה כבקר תהיה׃ | 17 |
௧௭அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
ובטחת כי יש תקוה וחפרת לבטח תשכב׃ | 18 |
௧௮நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.
ורבצת ואין מחריד וחלו פניך רבים׃ | 19 |
௧௯பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள்.
ועיני רשעים תכלינה ומנוס אבד מנהם ותקותם מפח נפש׃ | 20 |
௨0துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.