< הושע 6 >

לכו ונשובה אל יהוה כי הוא טרף וירפאנו יך ויחבשנו׃ 1
யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
יחינו מימים ביום השלישי יקמנו ונחיה לפניו׃ 2
இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
ונדעה נרדפה לדעת את יהוה כשחר נכון מצאו ויבוא כגשם לנו כמלקוש יורה ארץ׃ 3
அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
מה אעשה לך אפרים מה אעשה לך יהודה וחסדכם כענן בקר וכטל משכים הלך׃ 4
எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
על כן חצבתי בנביאים הרגתים באמרי פי ומשפטיך אור יצא׃ 5
ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
כי חסד חפצתי ולא זבח ודעת אלהים מעלות׃ 6
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன்.
והמה כאדם עברו ברית שם בגדו בי׃ 7
அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள்.
גלעד קרית פעלי און עקבה מדם׃ 8
கீலேயாத், அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
וכחכי איש גדודים חבר כהנים דרך ירצחו שכמה כי זמה עשו׃ 9
கொள்ளைக்காரர்களின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியர்களின் கூட்டம் காத்திருக்கிறது; கேடான காரியங்களையே செய்கிறார்கள்.
בבית ישראל ראיתי שעריריה שם זנות לאפרים נטמא ישראל׃ 10
௧0பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் விபசாரம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
גם יהודה שת קציר לך בשובי שבות עמי׃ 11
௧௧யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

< הושע 6 >