< יְחֶזְקֵאל 1 >

וַיְהִ֣י ׀ בִּשְׁלֹשִׁ֣ים שָׁנָ֗ה בָּֽרְבִיעִי֙ בַּחֲמִשָּׁ֣ה לַחֹ֔דֶשׁ וַאֲנִ֥י בְתֽוֹךְ־הַגּוֹלָ֖ה עַל־נְהַר־כְּבָ֑ר נִפְתְּחוּ֙ הַשָּׁמַ֔יִם וָאֶרְאֶ֖ה מַרְא֥וֹת אֱלֹהִֽים׃ 1
என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
בַּחֲמִשָּׁ֖ה לַחֹ֑דֶשׁ הִ֚יא הַשָּׁנָ֣ה הַחֲמִישִׁ֔ית לְגָל֖וּת הַמֶּ֥לֶךְ יוֹיָכִֽין׃ 2
அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது.
הָיֹ֣ה הָיָ֣ה דְבַר־יְ֠הוָה אֶל־יְחֶזְקֵ֨אל בֶּן־בּוּזִ֧י הַכֹּהֵ֛ן בְּאֶ֥רֶץ כַּשְׂדִּ֖ים עַל־נְהַר־כְּבָ֑ר וַתְּהִ֥י עָלָ֛יו שָׁ֖ם יַד־יְהוָֽה׃ 3
அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
וָאֵ֡רֶא וְהִנֵּה֩ ר֨וּחַ סְעָרָ֜ה בָּאָ֣ה מִן־הַצָּפ֗וֹן עָנָ֤ן גָּדוֹל֙ וְאֵ֣שׁ מִתְלַקַּ֔חַת וְנֹ֥גַֽהּ ל֖וֹ סָבִ֑יב וּמִ֨תּוֹכָ֔הּ כְּעֵ֥ין הַחַשְׁמַ֖ל מִתּ֥וֹךְ הָאֵֽשׁ׃ 4
இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது.
וּמִ֨תּוֹכָ֔הּ דְּמ֖וּת אַרְבַּ֣ע חַיּ֑וֹת וְזֶה֙ מַרְאֵֽיהֶ֔ן דְּמ֥וּת אָדָ֖ם לָהֵֽנָּה׃ 5
அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது.
וְאַרְבָּעָ֥ה פָנִ֖ים לְאֶחָ֑ת וְאַרְבַּ֥ע כְּנָפַ֖יִם לְאַחַ֥ת לָהֶֽם׃ 6
அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.
וְרַגְלֵיהֶ֖ם רֶ֣גֶל יְשָׁרָ֑ה וְכַ֣ף רַגְלֵיהֶ֗ם כְּכַף֙ רֶ֣גֶל עֵ֔גֶל וְנֹ֣צְצִ֔ים כְּעֵ֖ין נְחֹ֥שֶׁת קָלָֽל׃ 7
அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.
וידו אָדָ֗ם מִתַּ֙חַת֙ כַּנְפֵיהֶ֔ם עַ֖ל אַרְבַּ֣עַת רִבְעֵיהֶ֑ם וּפְנֵיהֶ֥ם וְכַנְפֵיהֶ֖ם לְאַרְבַּעְתָּֽם׃ 8
அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன.
חֹֽבְרֹ֛ת אִשָּׁ֥ה אֶל־אֲחוֹתָ֖הּ כַּנְפֵיהֶ֑ם לֹא־יִסַּ֣בּוּ בְלֶכְתָּ֔ן אִ֛ישׁ אֶל־עֵ֥בֶר פָּנָ֖יו יֵלֵֽכוּ׃ 9
அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.
וּדְמ֣וּת פְּנֵיהֶם֮ פְּנֵ֣י אָדָם֒ וּפְנֵ֨י אַרְיֵ֤ה אֶל־הַיָּמִין֙ לְאַרְבַּעְתָּ֔ם וּפְנֵי־שׁ֥וֹר מֵֽהַשְּׂמֹ֖אול לְאַרְבַּעְתָּ֑ן וּפְנֵי־נֶ֖שֶׁר לְאַרְבַּעְתָּֽן׃ 10
௧0அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன.
וּפְנֵיהֶ֕ם וְכַנְפֵיהֶ֥ם פְּרֻד֖וֹת מִלְמָ֑עְלָה לְאִ֗ישׁ שְׁ֚תַּיִם חֹבְר֣וֹת אִ֔ישׁ וּשְׁתַּ֣יִם מְכַסּ֔וֹת אֵ֖ת גְּוִיֹתֵיהֶֽנָה׃ 11
௧௧அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
וְאִ֛ישׁ אֶל־עֵ֥בֶר פָּנָ֖יו יֵלֵ֑כוּ אֶ֣ל אֲשֶׁר֩ יִֽהְיֶה־שָׁ֨מָּה הָר֤וּחַ לָלֶ֙כֶת֙ יֵלֵ֔כוּ לֹ֥א יִסַּ֖בּוּ בְּלֶכְתָּֽן׃ 12
௧௨அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
וּדְמ֨וּת הַחַיּ֜וֹת מַרְאֵיהֶ֣ם כְּגַחֲלֵי־אֵ֗שׁ בֹּֽעֲרוֹת֙ כְּמַרְאֵ֣ה הַלַּפִּדִ֔ים הִ֕יא מִתְהַלֶּ֖כֶת בֵּ֣ין הַחַיּ֑וֹת וְנֹ֣גַהּ לָאֵ֔שׁ וּמִן־הָאֵ֖שׁ יוֹצֵ֥א בָרָֽק׃ 13
௧௩உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது.
וְהַחַיּ֖וֹת רָצ֣וֹא וָשׁ֑וֹב כְּמַרְאֵ֖ה הַבָּזָֽק׃ 14
௧௪அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
וָאֵ֖רֶא הַחַיּ֑וֹת וְהִנֵּה֩ אוֹפַ֨ן אֶחָ֥ד בָּאָ֛רֶץ אֵ֥צֶל הַחַיּ֖וֹת לְאַרְבַּ֥עַת פָּנָֽיו׃ 15
௧௫நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
מַרְאֵ֨ה הָאוֹפַנִּ֤ים וּמַעֲשֵׂיהֶם֙ כְּעֵ֣ין תַּרְשִׁ֔ישׁ וּדְמ֥וּת אֶחָ֖ד לְאַרְבַּעְתָּ֑ן וּמַרְאֵיהֶם֙ וּמַ֣עֲשֵׂיהֶ֔ם כַּאֲשֶׁ֛ר יִהְיֶ֥ה הָאוֹפַ֖ן בְּת֥וֹךְ הָאוֹפָֽן׃ 16
௧௬சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது.
עַל־אַרְבַּ֥עַת רִבְעֵיהֶ֖ן בְּלֶכְתָּ֣ם יֵלֵ֑כוּ לֹ֥א יִסַּ֖בּוּ בְּלֶכְתָּֽן׃ 17
௧௭அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை.
וְגַ֨בֵּיהֶ֔ן וְגֹ֥בַהּ לָהֶ֖ם וְיִרְאָ֣ה לָהֶ֑ם וְגַבֹּתָ֗ם מְלֵאֹ֥ת עֵינַ֛יִם סָבִ֖יב לְאַרְבַּעְתָּֽן׃ 18
௧௮அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
וּבְלֶ֙כֶת֙ הַֽחַיּ֔וֹת יֵלְכ֥וּ הָאוֹפַנִּ֖ים אֶצְלָ֑ם וּבְהִנָּשֵׂ֤א הַֽחַיּוֹת֙ מֵעַ֣ל הָאָ֔רֶץ יִנָּשְׂא֖וּ הָאוֹפַנִּֽים׃ 19
௧௯அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
עַ֣ל אֲשֶׁר֩ יִֽהְיֶה־שָּׁ֨ם הָר֤וּחַ לָלֶ֙כֶת֙ יֵלֵ֔כוּ שָׁ֥מָּה הָר֖וּחַ לָלֶ֑כֶת וְהָאוֹפַנִּ֗ים יִנָּשְׂאוּ֙ לְעֻמָּתָ֔ם כִּ֛י ר֥וּחַ הַחַיָּ֖ה בָּאוֹפַנִּֽים׃ 20
௨0உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
בְּלֶכְתָּ֣ם יֵלֵ֔כוּ וּבְעָמְדָ֖ם יַֽעֲמֹ֑דוּ וּֽבְהִנָּשְׂאָ֞ם מֵעַ֣ל הָאָ֗רֶץ יִנָּשְׂא֤וּ הָאֽוֹפַנִּים֙ לְעֻמָּתָ֔ם כִּ֛י ר֥וּחַ הַחַיָּ֖ה בָּאוֹפַנִּֽים׃ 21
௨௧அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
וּדְמ֞וּת עַל־רָאשֵׁ֤י הַחַיָּה֙ רָקִ֔יעַ כְּעֵ֖ין הַקֶּ֣רַח הַנּוֹרָ֑א נָט֥וּי עַל־רָאשֵׁיהֶ֖ם מִלְמָֽעְלָה׃ 22
௨௨உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
וְתַ֙חַת֙ הָרָקִ֔יעַ כַּנְפֵיהֶ֣ם יְשָׁר֔וֹת אִשָּׁ֖ה אֶל־אֲחוֹתָ֑הּ לְאִ֗ישׁ שְׁתַּ֤יִם מְכַסּוֹת֙ לָהֵ֔נָּה וּלְאִ֗ישׁ שְׁתַּ֤יִם מְכַסּוֹת֙ לָהֵ֔נָּה אֵ֖ת גְּוִיֹּתֵיהֶֽם׃ 23
௨௩மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
וָאֶשְׁמַ֣ע אֶת־ק֣וֹל כַּנְפֵיהֶ֡ם כְּקוֹל֩ מַ֨יִם רַבִּ֤ים כְּקוֹל־שַׁדַּי֙ בְּלֶכְתָּ֔ם ק֥וֹל הֲמֻלָּ֖ה כְּק֣וֹל מַחֲנֶ֑ה בְּעָמְדָ֖ם תְּרַפֶּ֥ינָה כַנְפֵיהֶֽן׃ 24
௨௪அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன.
וַיְהִי־ק֕וֹל מֵעַ֕ל לָרָקִ֖יעַ אֲשֶׁ֣ר עַל־רֹאשָׁ֑ם בְּעָמְדָ֖ם תְּרַפֶּ֥ינָה כַנְפֵיהֶֽן׃ 25
௨௫அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
וּמִמַּ֗עַל לָרָקִ֙יעַ֙ אֲשֶׁ֣ר עַל־רֹאשָׁ֔ם כְּמַרְאֵ֥ה אֶֽבֶן־סַפִּ֖יר דְּמ֣וּת כִּסֵּ֑א וְעַל֙ דְּמ֣וּת הַכִּסֵּ֔א דְּמ֞וּת כְּמַרְאֵ֥ה אָדָ֛ם עָלָ֖יו מִלְמָֽעְלָה׃ 26
௨௬அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது.
וָאֵ֣רֶא ׀ כְּעֵ֣ין חַשְׁמַ֗ל כְּמַרְאֵה־אֵ֤שׁ בֵּֽית־לָהּ֙ סָבִ֔יב מִמַּרְאֵ֥ה מָתְנָ֖יו וּלְמָ֑עְלָה וּמִמַּרְאֵ֤ה מָתְנָיו֙ וּלְמַ֔טָּה רָאִ֙יתִי֙ כְּמַרְאֵה־אֵ֔שׁ וְנֹ֥גַֽהּ ל֖וֹ סָבִֽיב׃ 27
௨௭அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
כְּמַרְאֵ֣ה הַקֶּ֡שֶׁת אֲשֶׁר֩ יִֽהְיֶ֨ה בֶעָנָ֜ן בְּי֣וֹם הַגֶּ֗שֶׁם כֵּ֣ן מַרְאֵ֤ה הַנֹּ֙גַהּ֙ סָבִ֔יב ה֕וּא מַרְאֵ֖ה דְּמ֣וּת כְּבוֹד־יְהוָ֑ה וָֽאֶרְאֶה֙ וָאֶפֹּ֣ל עַל־פָּנַ֔י וָאֶשְׁמַ֖ע ק֥וֹל מְדַבֵּֽר׃ ס 28
௨௮மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

< יְחֶזְקֵאל 1 >