< צְפַנְיָה 2 >
הִֽתְקוֹשְׁשׁ֖וּ וָק֑וֹשּׁוּ הַגּ֖וֹי לֹ֥א נִכְסָֽף׃ | 1 |
௧விரும்பப்படாத தேசமே, கட்டளையிடுவதற்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோவதற்குமுன்னும், யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இறங்குவதற்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருவதற்குமுன்னும்,
בְּטֶ֙רֶם֙ לֶ֣דֶת חֹ֔ק כְּמֹ֖ץ עָ֣בַר י֑וֹם בְּטֶ֣רֶם ׀ לֹא־יָב֣וֹא עֲלֵיכֶ֗ם חֲרוֹן֙ אַף־יְהוָ֔ה בְּטֶ֙רֶם֙ לֹא־יָב֣וֹא עֲלֵיכֶ֔ם י֖וֹם אַף־יְהוָֽה׃ | 2 |
௨நீங்கள் உங்களை உணர்ந்து ஆராய்ந்து சோதியுங்கள்.
בַּקְּשׁ֤וּ אֶת־יְהוָה֙ כָּל־עַנְוֵ֣י הָאָ֔רֶץ אֲשֶׁ֥ר מִשְׁפָּט֖וֹ פָּעָ֑לוּ בַּקְּשׁוּ־צֶ֙דֶק֙ בַּקְּשׁ֣וּ עֲנָוָ֔ה אוּלַי֙ תִּסָּ֣תְר֔וּ בְּי֖וֹם אַף־יְהוָֽה׃ | 3 |
௩தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவுடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.
כִּ֤י עַזָּה֙ עֲזוּבָ֣ה תִֽהְיֶ֔ה וְאַשְׁקְל֖וֹן לִשְׁמָמָ֑ה אַשְׁדּ֗וֹד בַּֽצָּהֳרַ֙יִם֙ יְגָ֣רְשׁ֔וּהָ וְעֶקְר֖וֹן תֵּעָקֵֽר׃ ס | 4 |
௪காசா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.
ה֗וֹי יֹֽשְׁבֵ֛י חֶ֥בֶל הַיָּ֖ם גּ֣וֹי כְּרֵתִ֑ים דְּבַר־יְהוָ֣ה עֲלֵיכֶ֗ם כְּנַ֙עַן֙ אֶ֣רֶץ פְּלִשְׁתִּ֔ים וְהַאֲבַדְתִּ֖יךְ מֵאֵ֥ין יוֹשֵֽׁב׃ | 5 |
௫கடற்கரை குடிமக்களாகிய கிரேத்தியருக்கு ஐயோ, பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, யெகோவாவுடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடி உன்னை அழிப்பேன்.
וְֽהָיְתָ֞ה חֶ֣בֶל הַיָּ֗ם נְוֹ֛ת כְּרֹ֥ת רֹעִ֖ים וְגִדְר֥וֹת צֹֽאן׃ | 6 |
௬கடற்கரை தேசம் மேய்ப்பர்கள் தங்கும் குடிசைகளும் ஆட்டுத் தொழுவங்களுமாகும்.
וְהָ֣יָה חֶ֗בֶל לִשְׁאֵרִ֛ית בֵּ֥ית יְהוּדָ֖ה עֲלֵיהֶ֣ם יִרְע֑וּן בְּבָתֵּ֣י אַשְׁקְל֗וֹן בָּעֶ֙רֶב֙ יִרְבָּצ֔וּן כִּ֧י יִפְקְדֵ֛ם יְהוָ֥ה אֱלֹהֵיהֶ֖ם וְשָׁ֥ב שְׁבִיתָֽם׃ | 7 |
௭அந்த தேசம் யூதா சந்ததியாரில் மீதியாக இருப்பவர்களுக்குச் சொந்தமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே மாலையிலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பை மாற்றுவார்.
שָׁמַ֙עְתִּי֙ חֶרְפַּ֣ת מוֹאָ֔ב וְגִדּוּפֵ֖י בְּנֵ֣י עַמּ֑וֹן אֲשֶׁ֤ר חֵֽרְפוּ֙ אֶת־עַמִּ֔י וַיַּגְדִּ֖ילוּ עַל־גְּבוּלָֽם׃ | 8 |
௮மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
לָכֵ֣ן חַי־אָ֡נִי נְאֻם֩ יְהוָ֨ה צְבָא֜וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל כִּֽי־מוֹאָ֞ב כִּסְדֹ֤ם תִּֽהְיֶה֙ וּבְנֵ֤י עַמּוֹן֙ כַּֽעֲמֹרָ֔ה מִמְשַׁ֥ק חָר֛וּל וּמִכְרֵה־מֶ֥לַח וּשְׁמָמָ֖ה עַד־עוֹלָ֑ם שְׁאֵרִ֤ית עַמִּי֙ יְבָזּ֔וּם וְיֶ֥תֶר גּוֹיִ֖י יִנְחָלֽוּם׃ | 9 |
௯ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப்போலுமாகி, நெருஞ்சிமுள் படரும் இடமும், உப்புப்பள்ளமும், நிரந்தர பாழுமாயிருக்கும்; என் மக்களில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா உரைக்கிறார்.
זֹ֥את לָהֶ֖ם תַּ֣חַת גְּאוֹנָ֑ם כִּ֤י חֵֽרְפוּ֙ וַיַּגְדִּ֔לוּ עַל־עַ֖ם יְהוָ֥ה צְבָאֽוֹת׃ | 10 |
௧0அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.
נוֹרָ֤א יְהוָה֙ עֲלֵיהֶ֔ם כִּ֣י רָזָ֔ה אֵ֖ת כָּל־אֱלֹהֵ֣י הָאָ֑רֶץ וְיִשְׁתַּֽחֲווּ־לוֹ֙ אִ֣ישׁ מִמְּקוֹמ֔וֹ כֹּ֖ל אִיֵּ֥י הַגּוֹיִֽם׃ | 11 |
௧௧யெகோவா அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
גַּם־אַתֶּ֣ם כּוּשִׁ֔ים חַֽלְלֵ֥י חַרְבִּ֖י הֵֽמָּה׃ | 12 |
௧௨எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.
וְיֵ֤ט יָדוֹ֙ עַל־צָפ֔וֹן וִֽיאַבֵּ֖ד אֶת־אַשּׁ֑וּר וְיָשֵׂ֤ם אֶת־נִֽינְוֵה֙ לִשְׁמָמָ֔ה צִיָּ֖ה כַּמִּדְבָּֽר׃ | 13 |
௧௩அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார்.
וְרָבְצ֨וּ בְתוֹכָ֤הּ עֲדָרִים֙ כָּל־חַיְתוֹ־ג֔וֹי גַּם־קָאַת֙ גַּם־קִפֹּ֔ד בְּכַפְתֹּרֶ֖יהָ יָלִ֑ינוּ ק֠וֹל יְשׁוֹרֵ֤ר בַּֽחַלּוֹן֙ חֹ֣רֶב בַּסַּ֔ף כִּ֥י אַרְזָ֖ה עֵרָֽה׃ | 14 |
௧௪அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார்.
זֹ֠את הָעִ֤יר הָעַלִּיזָה֙ הַיּוֹשֶׁ֣בֶת לָבֶ֔טַח הָאֹֽמְרָה֙ בִּלְבָבָ֔הּ אֲנִ֖י וְאַפְסִ֣י ע֑וֹד אֵ֣יךְ ׀ הָיְתָ֣ה לְשַׁמָּ֗ה מַרְבֵּץ֙ לַֽחַיָּ֔ה כֹּ֚ל עוֹבֵ֣ר עָלֶ֔יהָ יִשְׁרֹ֖ק יָנִ֥יעַ יָדֽוֹ׃ ס | 15 |
௧௫நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, பொறுப்பில்லாமல் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகங்கள் வசிக்குமிடமாகப் போய்விட்டதே! அதின் வழியாகப் போகிறவன் எவனும் தன் கைகளைத்தட்டி ஏளனம் செய்வான்.