< יִרְמְיָהוּ 28 >

וַיְהִ֣י ׀ בַּשָּׁנָ֣ה הַהִ֗יא בְּרֵאשִׁית֙ מַמְלֶ֙כֶת֙ צִדְקִיָּ֣ה מֶֽלֶךְ־יְהוּדָ֔ה בַּשָּׁנָה֙ הָֽרְבִעִ֔ית בַּחֹ֖דֶשׁ הַחֲמִישִׁ֑י אָמַ֣ר אֵלַ֡י חֲנַנְיָה֩ בֶן־עַזּ֨וּר הַנָּבִ֜יא אֲשֶׁ֤ר מִגִּבְעוֹן֙ בְּבֵ֣ית יְהוָ֔ה לְעֵינֵ֧י הַכֹּהֲנִ֛ים וְכָל־הָעָ֖ם לֵאמֹֽר׃ 1
யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில், அசூரின் மகனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி யெகோவாவுடைய ஆலயத்தில் ஆசாரியர்களும் எல்லா மக்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:
כֹּֽה־אָמַ֞ר יְהוָ֧ה צְבָא֛וֹת אֱלֹהֵ֥י יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר שָׁבַ֞רְתִּי אֶת־עֹ֖ל מֶ֥לֶךְ בָּבֶֽל׃ 2
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.
בְּע֣וֹד ׀ שְׁנָתַ֣יִם יָמִ֗ים אֲנִ֤י מֵשִׁיב֙ אֶל־הַמָּק֣וֹם הַזֶּ֔ה אֶֽת־כָּל־כְּלֵ֖י בֵּ֣ית יְהוָ֑ה אֲשֶׁ֨ר לָקַ֜ח נְבוּכַדנֶאצַּ֤ר מֶֽלֶךְ־בָּבֶל֙ מִן־הַמָּק֣וֹם הַזֶּ֔ה וַיְבִיאֵ֖ם בָּבֶֽל׃ 3
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டுபோன யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையெல்லாம் நான் இரண்டு வருடகாலத்தில் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரச்செய்வேன்.
וְאֶת־יְכָנְיָ֣ה בֶן־יְהוֹיָקִ֣ים מֶֽלֶךְ־יְ֠הוּדָה וְאֶת־כָּל־גָּל֨וּת יְהוּדָ֜ה הַבָּאִ֣ים בָּבֶ֗לָה אֲנִ֥י מֵשִׁ֛יב אֶל־הַמָּק֥וֹם הַזֶּ֖ה נְאֻם־יְהוָ֑ה כִּ֣י אֶשְׁבֹּ֔ר אֶת־עֹ֖ל מֶ֥לֶךְ בָּבֶֽל׃ 4
யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.
וַיֹּ֙אמֶר֙ יִרְמְיָ֣ה הַנָּבִ֔יא אֶל־חֲנַנְיָ֖ה הַנָּבִ֑יא לְעֵינֵ֤י הַכֹּֽהֲנִים֙ וּלְעֵינֵ֣י כָל־הָעָ֔ם הָעֹמְדִ֖ים בְּבֵ֥ית יְהוָֽה׃ 5
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், யெகோவாவுடைய ஆலயத்தில் நின்றிருந்த மக்களெல்லோரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:
וַיֹּ֙אמֶר֙ יִרְמְיָ֣ה הַנָּבִ֔יא אָמֵ֕ן כֵּ֖ן יַעֲשֶׂ֣ה יְהוָ֑ה יָקֵ֤ם יְהוָה֙ אֶת־דְּבָרֶ֔יךָ אֲשֶׁ֣ר נִבֵּ֗אתָ לְהָשִׁ֞יב כְּלֵ֤י בֵית־יְהוָה֙ וְכָל־הַגּוֹלָ֔ה מִבָּבֶ֖ל אֶל־הַמָּק֥וֹם הַזֶּֽה׃ 6
ஆமென், யெகோவா அப்படியே செய்வாராக; யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்களையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரச்செய்வாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் யெகோவா நிறைவேற்றுவாராக.
אַךְ־שְׁמַֽע־נָא֙ הַדָּבָ֣ר הַזֶּ֔ה אֲשֶׁ֥ר אָנֹכִ֖י דֹּבֵ֣ר בְּאָזְנֶ֑יךָ וּבְאָזְנֵ֖י כָּל־הָעָֽם׃ 7
ஆனாலும், உன் காதுகளும் எல்லா மக்களின் காதுகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.
הַנְּבִיאִ֗ים אֲשֶׁ֨ר הָי֧וּ לְפָנַ֛י וּלְפָנֶ֖יךָ מִן־הָֽעוֹלָ֑ם וַיִּנָּ֨בְא֜וּ אֶל־אֲרָצ֤וֹת רַבּוֹת֙ וְעַל־מַמְלָכ֣וֹת גְּדֹל֔וֹת לְמִלְחָמָ֖ה וּלְרָעָ֥ה וּלְדָֽבֶר׃ 8
பூர்வகாலமுதல் எனக்குமுன்னும் உனக்குமுன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், போரையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
הַנָּבִ֕יא אֲשֶׁ֥ר יִנָּבֵ֖א לְשָׁל֑וֹם בְּבֹא֙ דְּבַ֣ר הַנָּבִ֗יא יִוָּדַע֙ הַנָּבִ֔יא אֲשֶׁר־שְׁלָח֥וֹ יְהוָ֖ה בֶּאֱמֶֽת׃ 9
சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் யெகோவா மெய்யாக அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.
וַיִּקַּ֞ח חֲנַנְיָ֤ה הַנָּבִיא֙ אֶת־הַמּוֹטָ֔ה מֵעַ֕ל צַוַּ֖אר יִרְמְיָ֣ה הַנָּבִ֑יא וַֽיִּשְׁבְּרֵֽהוּ׃ 10
௧0அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
וַיֹּ֣אמֶר חֲנַנְיָה֩ לְעֵינֵ֨י כָל־הָעָ֜ם לֵאמֹ֗ר כֹּה֮ אָמַ֣ר יְהוָה֒ כָּ֣כָה אֶשְׁבֹּ֞ר אֶת־עֹ֣ל ׀ נְבֻֽכַדְנֶאצַּ֣ר מֶֽלֶךְ־בָּבֶ֗ל בְּעוֹד֙ שְׁנָתַ֣יִם יָמִ֔ים מֵעַ֕ל צַוַּ֖אר כָּל־הַגּוֹיִ֑ם וַיֵּ֛לֶךְ יִרְמְיָ֥ה הַנָּבִ֖יא לְדַרְכּֽוֹ׃ פ 11
௧௧பின்பு அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும்: இந்தப் பிரகாரமாக இரண்டு வருடகாலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தை எல்லா மக்களின் கழுத்துகளிலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான்.
וַיְהִ֥י דְבַר־יְהוָ֖ה אֶֽל־יִרְמְיָ֑ה אַ֠חֲרֵי שְׁב֞וֹר חֲנַנְיָ֤ה הַנָּבִיא֙ אֶת־הַמּוֹטָ֔ה מֵעַ֗ל צַוַּ֛אר יִרְמְיָ֥ה הַנָּבִ֖יא לֵאמֹֽר׃ 12
௧௨அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்ட பிற்பாடு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
הָלוֹךְ֩ וְאָמַרְתָּ֨ אֶל־חֲנַנְיָ֜ה לֵאמֹ֗ר כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה מוֹטֹ֥ת עֵ֖ץ שָׁבָ֑רְתָּ וְעָשִׂ֥יתָ תַחְתֵּיהֶ֖ן מֹט֥וֹת בַּרְזֶֽל׃ 13
௧௩நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தை உண்டாக்கு என்று யெகோவா சொன்னார்.
כִּ֣י כֹֽה־אָמַר֩ יְהוָ֨ה צְבָא֜וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל עֹ֣ל בַּרְזֶ֡ל נָתַ֜תִּי עַל־צַוַּ֣אר ׀ כָּל־הַגּוֹיִ֣ם הָאֵ֗לֶּה לַעֲבֹ֛ד אֶת־נְבֻכַדְנֶאצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶ֖ל וַעֲבָדֻ֑הוּ וְגַ֛ם אֶת־חַיַּ֥ת הַשָּׂדֶ֖ה נָתַ֥תִּי לֽוֹ׃ 14
௧௪பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணியும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா தேசத்து மக்களுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.
וַיֹּ֨אמֶר יִרְמְיָ֧ה הַנָּבִ֛יא אֶל־חֲנַנְיָ֥ה הַנָּבִ֖יא שְׁמַֽע־נָ֣א חֲנַנְיָ֑ה לֹֽא־שְׁלָחֲךָ֣ יְהוָ֔ה וְאַתָּ֗ה הִבְטַ֛חְתָּ אֶת־הָעָ֥ם הַזֶּ֖ה עַל־שָֽׁקֶר׃ 15
௧௫பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; யெகோவா உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த மக்களைப் பொய்யை நம்பச் செய்தாய்.
לָכֵ֗ן כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה הִנְנִי֙ מְשַֽׁלֵּֽחֲךָ֔ מֵעַ֖ל פְּנֵ֣י הָאֲדָמָ֑ה הַשָּׁנָה֙ אַתָּ֣ה מֵ֔ת כִּֽי־סָרָ֥ה דִבַּ֖רְתָּ אֶל־יְהוָֽה׃ 16
௧௬ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இல்லாமல் அகற்றிவிடுவேன்; இந்த வருடத்தில் நீ இறந்துபோவாய் என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் ஏற்படப் பேசினாயே என்றான்.
וַיָּ֛מָת חֲנַנְיָ֥ה הַנָּבִ֖יא בַּשָּׁנָ֣ה הַהִ֑יא בַּחֹ֖דֶשׁ הַשְּׁבִיעִֽי׃ פ 17
௧௭அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.

< יִרְמְיָהוּ 28 >