< תְהִלִּים 97 >
יְהוָ֣ה מָ֭לָךְ תָּגֵ֣ל הָאָ֑רֶץ יִ֝שְׂמְח֗וּ אִיִּ֥ים רַבִּֽים׃ | 1 |
யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.
עָנָ֣ן וַעֲרָפֶ֣ל סְבִיבָ֑יו צֶ֥דֶק וּ֝מִשְׁפָּ֗ט מְכֹ֣ון כִּסְאֹֽו׃ | 2 |
மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.
אֵ֭שׁ לְפָנָ֣יו תֵּלֵ֑ךְ וּתְלַהֵ֖ט סָבִ֣יב צָרָֽיו׃ | 3 |
நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
הֵאִ֣ירוּ בְרָקָ֣יו תֵּבֵ֑ל רָאֲתָ֖ה וַתָּחֵ֣ל הָאָֽרֶץ׃ | 4 |
அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.
הָרִ֗ים כַּדֹּונַ֗ג נָ֭מַסּוּ מִלִּפְנֵ֣י יְהוָ֑ה מִ֝לִּפְנֵ֗י אֲדֹ֣ון כָּל־הָאָֽרֶץ׃ | 5 |
யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.
הִגִּ֣ידוּ הַשָּׁמַ֣יִם צִדְקֹ֑ו וְרָא֖וּ כָל־הָעַמִּ֣ים כְּבֹודֹֽו׃ | 6 |
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
יֵבֹ֤שׁוּ ׀ כָּל־עֹ֬בְדֵי פֶ֗סֶל הַמִּֽתְהַלְלִ֥ים בָּאֱלִילִ֑ים הִשְׁתַּחֲווּ־לֹ֝ו כָּל־אֱלֹהִֽים׃ | 7 |
உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
שָׁמְעָ֬ה וַתִּשְׂמַ֨ח ׀ צִיֹּ֗ון וַ֭תָּגֵלְנָה בְּנֹ֣ות יְהוּדָ֑ה לְמַ֖עַן מִשְׁפָּטֶ֣יךָ יְהוָֽה׃ | 8 |
யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் சீயோன் கேட்டுக் களிகூருகிறது; யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.
כִּֽי־אַתָּ֤ה יְהוָ֗ה עֶלְיֹ֥ון עַל־כָּל־הָאָ֑רֶץ מְאֹ֥ד נַ֝עֲלֵ֗יתָ עַל־כָּל־אֱלֹהִֽים׃ | 9 |
யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
אֹהֲבֵ֥י יְהוָ֗ה שִׂנְא֫וּ רָ֥ע שֹׁ֭מֵר נַפְשֹׁ֣ות חֲסִידָ֑יו מִיַּ֥ד רְ֝שָׁעִ֗ים יַצִּילֵֽם׃ | 10 |
யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
אֹ֖ור זָרֻ֣עַ לַצַּדִּ֑יק וּֽלְיִשְׁרֵי־לֵ֥ב שִׂמְחָֽה׃ | 11 |
நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
שִׂמְח֣וּ צַ֭דִּיקִים בַּֽיהוָ֑ה וְ֝הֹוד֗וּ לְזֵ֣כֶר קָדְשֹֽׁו׃ | 12 |
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.