< תְהִלִּים 148 >

הַ֥לְלוּ יָ֨הּ ׀ הַֽלְל֣וּ אֶת־יְ֭הוָה מִן־הַשָּׁמַ֑יִם הֽ͏ַ֝לְל֗וּהוּ בַּמְּרֹומִֽים׃ 1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
הֽ͏ַלְל֥וּהוּ כָל־מַלְאָכָ֑יו הַֽ֝לְל֗וּהוּ כָּל־צְבָאֹו (צְבָאָֽיו)׃ 2
அவருடைய தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.
הַֽ֭לְלוּהוּ שֶׁ֣מֶשׁ וְיָרֵ֑חַ הַ֝לְל֗וּהוּ כָּל־כֹּ֥וכְבֵי אֹֽור׃ 3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
הַֽ֭לְלוּהוּ שְׁמֵ֣י הַשָּׁמָ֑יִם וְ֝הַמַּ֗יִם אֲשֶׁ֤ר ׀ מֵעַ֬ל הַשָּׁמָֽיִם׃ 4
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
יְֽ֭הַֽלְלוּ אֶת־שֵׁ֣ם יְהוָ֑ה כִּ֤י ה֭וּא צִוָּ֣ה וְנִבְרָֽאוּ׃ 5
அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
וַיַּעֲמִידֵ֣ם לָעַ֣ד לְעֹולָ֑ם חָק־נָ֝תַ֗ן וְלֹ֣א יַעֲבֹֽור׃ 6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.
הַֽלְל֣וּ אֶת־יְ֭הוָה מִן־הָאָ֑רֶץ תַּ֝נִּינִ֗ים וְכָל־תְּהֹמֹֽות׃ 7
பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
אֵ֣שׁ וּ֭בָרָד שֶׁ֣לֶג וְקִיטֹ֑ור ר֥וּחַ סְ֝עָרָ֗ה עֹשָׂ֥ה דְבָרֹֽו׃ 8
அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
הֶהָרִ֥ים וְכָל־גְּבָעֹ֑ות עֵ֥ץ פְּ֝רִ֗י וְכָל־אֲרָזִֽים׃ 9
மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே,
הַֽחַיָּ֥ה וְכָל־בְּהֵמָ֑ה רֶ֝֗מֶשׂ וְצִפֹּ֥ור כָּנָֽף׃ 10
௧0காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
מַלְכֵי־אֶ֭רֶץ וְכָל־לְאֻמִּ֑ים שָׂ֝רִ֗ים וְכָל־שֹׁ֥פְטֵי אָֽרֶץ׃ 11
௧௧பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
בַּחוּרִ֥ים וְגַם־בְּתוּלֹ֑ות זְ֝קֵנִ֗ים עִם־נְעָרֽ͏ִים׃ 12
௧௨வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவை துதியுங்கள்.
יְהַלְל֤וּ ׀ אֶת־שֵׁ֬ם יְהוָ֗ה כִּֽי־נִשְׂגָּ֣ב שְׁמֹ֣ו לְבַדֹּ֑ו הֹ֝ודֹ֗ו עַל־אֶ֥רֶץ וְשָׁמָֽיִם׃ 13
௧௩அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
וַיָּ֤רֶם קֶ֨רֶן ׀ לְעַמֹּ֡ו תְּהִלָּ֤ה לְֽכָל־חֲסִידָ֗יו לִבְנֵ֣י יִ֭שְׂרָאֵל עַֽם־קְרֹבֹ֗ו הַֽלְלוּ־יָֽהּ׃ 14
௧௪அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

< תְהִלִּים 148 >