< תְהִלִּים 140 >

לַמְנַצֵּ֗חַ מִזְמֹ֥ור לְדָוִֽד׃ חַלְּצֵ֣נִי יְ֭הוָה מֵאָדָ֣ם רָ֑ע מֵאִ֖ישׁ חֲמָסִ֣ים תִּנְצְרֵֽנִי׃ 1
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
אֲשֶׁ֤ר חָשְׁב֣וּ רָעֹ֣ות בְּלֵ֑ב כָּל־יֹ֝֗ום יָג֥וּרוּ מִלְחָמֹֽות׃ 2
அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
שָֽׁנֲנ֣וּ לְשֹׁונָם֮ כְּֽמֹו־נָ֫חָ֥שׁ חֲמַ֥ת עַכְשׁ֑וּב תַּ֖חַת שְׂפָתֵ֣ימֹו סֶֽלָה׃ 3
பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
שָׁמְרֵ֤נִי יְהוָ֨ה ׀ מִ֘ידֵ֤י רָשָׁ֗ע מֵאִ֣ישׁ חֲמָסִ֣ים תִּנְצְרֵ֑נִי אֲשֶׁ֥ר חָ֝שְׁב֗וּ לִדְחֹ֥ות פְּעָמָֽי׃ 4
யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
טָֽמְנֽוּ־גֵאִ֨ים ׀ פַּ֡ח לִ֗י וַחֲבָלִ֗ים פָּ֣רְשׂוּ רֶ֭שֶׁת לְיַד־מַעְגָּ֑ל מֹקְשִׁ֖ים שָֽׁתוּ־לִ֣י סֶֽלָה׃ 5
பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
אָמַ֣רְתִּי לַ֭יהוָה אֵ֣לִי אָ֑תָּה הַאֲזִ֥ינָה יְ֝הוָ֗ה קֹ֣ול תַּחֲנוּנָֽי׃ 6
நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
יְהֹוִ֣ה אֲ֭דֹנָי עֹ֣ז יְשׁוּעָתִ֑י סַכֹּ֥תָה לְ֝רֹאשִׁ֗י בְּיֹ֣ום נָֽשֶׁק׃ 7
ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
אַל־תִּתֵּ֣ן יְ֭הוָה מַאֲוַיֵּ֣י רָשָׁ֑ע זְמָמֹ֥ו אַל־תָּ֝פֵ֗ק יָר֥וּמוּ סֶֽלָה׃ 8
யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
רֹ֥אשׁ מְסִבָּ֑י עֲמַ֖ל שְׂפָתֵ֣ימֹו יְכַסּוּמֹו (יְכַסֵּֽמֹו)׃ 9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
יָמִיטוּ (יִמֹּ֥וטוּ) עֲלֵיהֶ֗ם גֶּֽחָ֫לִ֥ים בָּאֵ֥שׁ יַפִּלֵ֑ם בְּ֝מַהֲמֹרֹ֗ות בַּֽל־יָקֽוּמוּ׃ 10
௧0நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
אִ֥ישׁ לָשֹׁון֮ בַּל־יִכֹּ֪ון בָּ֫אָ֥רֶץ אִישׁ־חָמָ֥ס רָ֑ע יְ֝צוּדֶ֗נּוּ לְמַדְחֵפֹֽת׃ 11
௧௧பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
יָדַעְתָּ (יָדַ֗עְתִּי) כִּֽי־יַעֲשֶׂ֣ה יְ֭הוָה דִּ֣ין עָנִ֑י מִ֝שְׁפַּ֗ט אֶבְיֹנִֽים׃ 12
௧௨சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
אַ֣ךְ צַ֭דִּיקִים יֹוד֣וּ לִשְׁמֶ֑ךָ יֵשְׁב֥וּ יְ֝שָׁרִ֗ים אֶת־פָּנֶֽיךָ׃ 13
௧௩நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

< תְהִלִּים 140 >