< שֹׁפְטִים 21 >

וְאִ֣ישׁ יִשְׂרָאֵ֔ל נִשְׁבַּ֥ע בַּמִּצְפָּ֖ה לֵאמֹ֑ר אִ֣ישׁ מִמֶּ֔נּוּ לֹא־יִתֵּ֥ן בִּתֹּ֛ו לְבִנְיָמִ֖ן לְאִשָּֽׁה׃ 1
இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.
וַיָּבֹ֤א הָעָם֙ בֵּֽית־אֵ֔ל וַיֵּ֤שְׁבוּ שָׁם֙ עַד־הָעֶ֔רֶב לִפְנֵ֖י הָאֱלֹהִ֑ים וַיִּשְׂא֣וּ קֹולָ֔ם וַיִּבְכּ֖וּ בְּכִ֥י גָדֹֽול׃ 2
ஆகவே, மக்கள் பெத்தேலுக்குப்போய், அங்கே தேவனுக்கு முன்பாக மாலைவரை உட்கார்ந்திருந்து, சத்தமிட்டு மிகவும் அழுது:
וַיֹּ֣אמְר֔וּ לָמָ֗ה יְהוָה֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל הָ֥יְתָה זֹ֖את בְּיִשְׂרָאֵ֑ל לְהִפָּקֵ֥ד הַיֹּ֛ום מִיִּשְׂרָאֵ֖ל שֵׁ֥בֶט אֶחָֽד׃ 3
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகும்படி இஸ்ரவேலில் இந்தக் காரியம் சம்பவித்தது என்ன என்றார்கள்.
וַֽיְהִי֙ מִֽמָּחֳרָ֔ת וַיַּשְׁכִּ֣ימוּ הָעָ֔ם וַיִּבְנוּ־שָׁ֖ם מִזְבֵּ֑חַ וַיַּעֲל֥וּ עֹלֹ֖ות וּשְׁלָמִֽים׃ פ 4
மறுநாளிலே, மக்கள் அதிகாலையில் எழுந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
וַיֹּֽאמְרוּ֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל מִ֠י אֲשֶׁ֨ר לֹא־עָלָ֧ה בַקָּהָ֛ל מִכָּל־שִׁבְטֵ֥י יִשְׂרָאֵ֖ל אֶל־יְהוָ֑ה כִּי֩ הַשְּׁבוּעָ֨ה הַגְּדֹולָ֜ה הָיְתָ֗ה לַ֠אֲשֶׁר לֹא־עָלָ֨ה אֶל־יְהוָ֧ה הַמִּצְפָּ֛ה לֵאמֹ֖ר מֹ֥ות יוּמָֽת׃ 5
யெகோவாவுடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள்: யெகோவாவுடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராமல்போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
וַיִּנָּֽחֲמוּ֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל אֶל־בִּנְיָמִ֖ן אָחִ֑יו וַיֹּ֣אמְר֔וּ נִגְדַּ֥ע הַיֹּ֛ום שֵׁ֥בֶט אֶחָ֖ד מִיִּשְׂרָאֵֽל׃ 6
இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரனாகிய பென்யமீனனை நினைத்து, வேதனையடைந்து: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டு போயிற்றே.
מַה־נַּעֲשֶׂ֥ה לָהֶ֛ם לַנֹּותָרִ֖ים לְנָשִׁ֑ים וַאֲנַ֙חְנוּ֙ נִשְׁבַּ֣עְנוּ בַֽיהוָ֔ה לְבִלְתִּ֛י תֵּת־לָהֶ֥ם מִבְּנֹותֵ֖ינוּ לְנָשִֽׁים׃ 7
மீதியாக இருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் அவர்களுக்கு என்ன செய்யலாம்? நம்முடைய மகள்களில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் யெகோவா மேல் ஆணையிட்டுக் கொண்டோமே.
וַיֹּ֣אמְר֔וּ מִ֗י אֶחָד֙ מִשִּׁבְטֵ֣י יִשְׂרָאֵ֔ל אֲשֶׁ֛ר לֹֽא־עָלָ֥ה אֶל־יְהוָ֖ה הַמִּצְפָּ֑ה וְ֠הִנֵּה לֹ֣א בָא־אִ֧ישׁ אֶל־הַֽמַּחֲנֶ֛ה מִיָּבֵ֥ישׁ גִּלְעָ֖ד אֶל־הַקָּהָֽל׃ 8
இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியில் வராமல் போனவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களில் ஒருவரும் முகாமில் சபைகூடினபோது வரவில்லை.
וַיִּתְפָּקֵ֖ד הָעָ֑ם וְהִנֵּ֤ה אֵֽין־שָׁם֙ אִ֔ישׁ מִיֹּושְׁבֵ֖י יָבֵ֥שׁ גִּלְעָֽד׃ 9
மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
וַיִּשְׁלְחוּ־שָׁ֣ם הָעֵדָ֗ה שְׁנֵים־עָשָׂ֥ר אֶ֛לֶף אִ֖ישׁ מִבְּנֵ֣י הֶחָ֑יִל וַיְצַוּ֨וּ אֹותָ֜ם לֵאמֹ֗ר לְ֠כוּ וְהִכִּיתֶ֞ם אֶת־יֹושְׁבֵ֨י יָבֵ֤שׁ גִּלְעָד֙ לְפִי־חֶ֔רֶב וְהַנָּשִׁ֖ים וְהַטָּֽף׃ 10
௧0உடனே சபையார் பெலவான்களில் பன்னிரண்டாயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் கீலேயாத்திலுள்ள யாபேசிற்குப் போய், பெண்களையும் பிள்ளைகளையும்கூட கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோடுங்கள்.
וְזֶ֥ה הַדָּבָ֖ר אֲשֶׁ֣ר תַּעֲשׂ֑וּ כָּל־זָכָ֗ר וְכָל־אִשָּׁ֛ה יֹדַ֥עַת מִשְׁכַּב־זָכָ֖ר תַּחֲרִֽימוּ׃ 11
௧௧எல்லா ஆண்பிள்ளைகளையும், திருமணமான எல்லா பெண்பிள்ளைகளையும் கொன்றுபோடவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பினார்கள்.
וַֽיִּמְצְא֞וּ מִיֹּושְׁבֵ֣י ׀ יָבֵ֣ישׁ גִּלְעָ֗ד אַרְבַּ֤ע מֵאֹות֙ נַעֲרָ֣ה בְתוּלָ֔ה אֲשֶׁ֧ר לֹֽא־יָדְעָ֛ה אִ֖ישׁ לְמִשְׁכַּ֣ב זָכָ֑ר וַיָּבִ֨יאוּ אֹותָ֤ם אֶל־הַֽמַּחֲנֶה֙ שִׁלֹ֔ה אֲשֶׁ֖ר בְּאֶ֥רֶץ כְּנָֽעַן׃ ס 12
௧௨இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடியிருக்கிறவர்களிடத்தில் திருமணமாகாத 400 கன்னிப்பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற முகாமிற்கு கொண்டுவந்தார்கள்.
וַֽיִּשְׁלְחוּ֙ כָּל־הָ֣עֵדָ֔ה וַֽיְדַבְּרוּ֙ אֶל־בְּנֵ֣י בִנְיָמִ֔ן אֲשֶׁ֖ר בְּסֶ֣לַע רִמֹּ֑ון וַיִּקְרְא֥וּ לָהֶ֖ם שָׁלֹֽום׃ 13
௧௩அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் மக்களோடு பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லோரும் செய்தி அனுப்பினார்கள்.
וַיָּ֤שָׁב בִּנְיָמִן֙ בָּעֵ֣ת הַהִ֔יא וַיִּתְּנ֤וּ לָהֶם֙ הַנָּשִׁ֔ים אֲשֶׁ֣ר חִיּ֔וּ מִנְּשֵׁ֖י יָבֵ֣שׁ גִּלְעָ֑ד וְלֹֽא־מָצְא֥וּ לָהֶ֖ם כֵּֽן׃ 14
௧௪எனவே, அக்காலத்தில் பென்யமீனர்கள் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் பெண்களில் உயிரோடு வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாமலிருந்தது.
וְהָעָ֥ם נִחָ֖ם לְבִנְיָמִ֑ן כִּֽי־עָשָׂ֧ה יְהוָ֛ה פֶּ֖רֶץ בְּשִׁבְטֵ֥י יִשְׂרָאֵֽל׃ 15
௧௫இஸ்ரவேல் கோத்திரங்களிலே யெகோவா ஒரு பிரிவை உண்டாக்கினார் என்று மக்கள் பென்யமீனர்களுக்காக மனவேதனை அடைந்தார்கள்.
וַיֹּֽאמְר֨וּ זִקְנֵ֣י הָעֵדָ֔ה מַה־נַּעֲשֶׂ֥ה לַנֹּותָרִ֖ים לְנָשִׁ֑ים כִּֽי־נִשְׁמְדָ֥ה מִבִּנְיָמִ֖ן אִשָּֽׁה׃ 16
௧௬பென்யமீன் கோத்திர பெண்கள் இறந்தபடியினாலே, மீதியான மற்றவர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் கேட்டு,
וַיֹּ֣אמְר֔וּ יְרֻשַּׁ֥ת פְּלֵיטָ֖ה לְבִנְיָמִ֑ן וְלֹֽא־יִמָּחֶ֥ה שֵׁ֖בֶט מִיִּשְׂרָאֵֽל׃ 17
௧௭இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடி, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
וַאֲנַ֗חְנוּ לֹ֥א נוּכַ֛ל לָתֵת־לָהֶ֥ם נָשִׁ֖ים מִבְּנֹותֵ֑ינוּ כִּֽי־נִשְׁבְּע֤וּ בְנֵֽי־יִשְׂרָאֵל֙ לֵאמֹ֔ר אָר֕וּר נֹתֵ֥ן אִשָּׁ֖ה לְבִנְיָמִֽן׃ ס 18
௧௮நாமோ நம்முடைய மகள்களில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனர்களுக்குப் பெண் கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் மக்கள் ஆணையிட்டார்களே என்றார்கள்.
וַיֹּאמְר֡וּ הִנֵּה֩ חַג־יְהוָ֨ה בְּשִׁלֹ֜ו מִיָּמִ֣ים ׀ יָמִ֗ימָה אֲשֶׁ֞ר מִצְּפֹ֤ונָה לְבֵֽית־אֵל֙ מִזְרְחָ֣ה הַשֶּׁ֔מֶשׁ לִמְסִלָּ֔ה הָעֹלָ֥ה מִבֵּֽית־אֵ֖ל שְׁכֶ֑מָה וּמִנֶּ֖גֶב לִלְבֹונָֽה׃ 19
௧௯பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கில் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே ஒவ்வொரு வருடமும் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,
וַיְצַו (וַיְצַוּ֕וּ) אֶת־בְּנֵ֥י בִנְיָמִ֖ן לֵאמֹ֑ר לְכ֖וּ וַאֲרַבְתֶּ֥ם בַּכְּרָמִֽים׃ 20
௨0அவர்கள் பென்யமீன் மனிதர்களை நோக்கி: நீங்கள் போய், திராட்சைத் தோட்டங்களிலே மறைந்திருந்து,
וּרְאִיתֶ֗ם וְ֠הִנֵּה אִם־יֵ֨צְא֥וּ בְנֹות־שִׁילֹו֮ לָח֣וּל בַּמְּחֹלֹות֒ וִֽיצָאתֶם֙ מִן־הַכְּרָמִ֔ים וַחֲטַפְתֶּ֥ם לָכֶ֛ם אִ֥ישׁ אִשְׁתֹּ֖ו מִבְּנֹ֣ות שִׁילֹ֑ו וַהֲלַכְתֶּ֖ם אֶ֥רֶץ בִּנְיָמִֽן׃ 21
௨௧சீலோவின் பெண்பிள்ளைகள் கீதவாத்தியத்தோடு நடனம் செய்கிறவர்களாகப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் பார்க்கும்போது, திராட்சைத் தோட்டங்களிலிருந்து விரைந்து, உங்களில் அவரவர் சீலோவின் பெண்பிள்ளைகளில் ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.
וְהָיָ֡ה כִּֽי־יָבֹ֣אוּ אֲבֹותָם֩ אֹ֨ו אֲחֵיהֶ֜ם לָרֹוב (לָרִ֣יב ׀) אֵלֵ֗ינוּ וְאָמַ֤רְנוּ אֲלֵיהֶם֙ חָנּ֣וּנוּ אֹותָ֔ם כִּ֣י לֹ֥א לָקַ֛חְנוּ אִ֥ישׁ אִשְׁתֹּ֖ו בַּמִּלְחָמָ֑ה כִּ֣י לֹ֥א אַתֶּ֛ם נְתַתֶּ֥ם לָהֶ֖ם כָּעֵ֥ת תֶּאְשָֽׁמוּ׃ ס 22
௨௨அவர்களுடைய தகப்பன்மார்களாகிலும், சகோதரர்களாகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்களுக்காக அவர்களுக்குத் தயவு செய்யுங்கள்; நாங்கள் யுத்தம் செய்து, அவனவனுக்கு மனைவியைப் பிடித்துக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக, இப்போது நீங்கள் அவர்களுக்கு உங்கள் மகள்களைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
וַיַּֽעֲשׂוּ־כֵן֙ בְּנֵ֣י בִנְיָמִ֔ן וַיִּשְׂא֤וּ נָשִׁים֙ לְמִסְפָּרָ֔ם מִן־הַמְּחֹלְלֹ֖ות אֲשֶׁ֣ר גָּזָ֑לוּ וַיֵּלְכ֗וּ וַיָּשׁ֙וּבוּ֙ אֶל־נַ֣חֲלָתָ֔ם וַיִּבְנוּ֙ אֶת־הֶ֣עָרִ֔ים וַיֵּשְׁב֖וּ בָּהֶֽם׃ 23
௨௩பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
וַיִּתְהַלְּכ֨וּ מִשָּׁ֤ם בְּנֵֽי־יִשְׂרָאֵל֙ בָּעֵ֣ת הַהִ֔יא אִ֥ישׁ לְשִׁבְטֹ֖ו וּלְמִשְׁפַּחְתֹּ֑ו וַיֵּצְא֣וּ מִשָּׁ֔ם אִ֖ישׁ לְנַחֲלָתֹֽו׃ 24
௨௪இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
בַּיָּמִ֣ים הָהֵ֔ם אֵ֥ין מֶ֖לֶךְ בְּיִשְׂרָאֵ֑ל אִ֛ישׁ הַיָּשָׁ֥ר בְּעֵינָ֖יו יַעֲשֶֽׂה׃ 25
௨௫அந்த நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்னுடைய பார்வைக்குச் சரியானபடி செய்து வந்தான்.

< שֹׁפְטִים 21 >