< תהילים 99 >
יְהֹוָה מָלָךְ יִרְגְּזוּ עַמִּים יֹשֵׁב כְּרוּבִים תָּנוּט הָאָֽרֶץ׃ | 1 |
யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.
יְהֹוָה בְּצִיּוֹן גָּדוֹל וְרָם הוּא עַל־כׇּל־הָעַמִּֽים׃ | 2 |
சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
יוֹדוּ שִׁמְךָ גָּדוֹל וְנוֹרָא קָדוֹשׁ הֽוּא׃ | 3 |
பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.
וְעֹז מֶלֶךְ מִשְׁפָּט אָהֵב אַתָּה כּוֹנַנְתָּ מֵישָׁרִים מִשְׁפָּט וּצְדָקָה בְּיַעֲקֹב ׀ אַתָּה עָשִֽׂיתָ׃ | 4 |
அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
רוֹמְמוּ יְהֹוָה אֱלֹהֵינוּ וְֽהִשְׁתַּחֲווּ לַהֲדֹם רַגְלָיו קָדוֹשׁ הֽוּא׃ | 5 |
நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; அவர் பரிசுத்தமானவர்.
מֹשֶׁה וְאַֽהֲרֹן ׀ בְּֽכֹהֲנָיו וּשְׁמוּאֵל בְּקֹרְאֵי שְׁמוֹ קֹרִאים אֶל־יְהֹוָה וְהוּא יַעֲנֵֽם׃ | 6 |
அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
בְּעַמּוּד עָנָן יְדַבֵּר אֲלֵיהֶם שָׁמְרוּ עֵדֹתָיו וְחֹק נָֽתַן־לָֽמוֹ׃ | 7 |
அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர் அவர்களுக்குக் கொடுத்த அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
יְהֹוָה אֱלֹהֵינוּ אַתָּה עֲנִיתָם אֵל נֹשֵׂא הָיִיתָ לָהֶם וְנֹקֵם עַל־עֲלִילוֹתָֽם׃ | 8 |
எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
רוֹמְמוּ יְהֹוָה אֱלֹהֵינוּ וְֽהִשְׁתַּחֲווּ לְהַר קׇדְשׁוֹ כִּי־קָדוֹשׁ יְהֹוָה אֱלֹהֵֽינוּ׃ | 9 |
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.