< ויקרא 27 >
וַיְדַבֵּר יְהֹוָה אֶל־מֹשֶׁה לֵּאמֹֽר׃ | 1 |
௧பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
דַּבֵּר אֶל־בְּנֵי יִשְׂרָאֵל וְאָמַרְתָּ אֲלֵהֶם אִישׁ כִּי יַפְלִא נֶדֶר בְּעֶרְכְּךָ נְפָשֹׁת לַֽיהֹוָֽה׃ | 2 |
௨“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி யெகோவாவுக்கு உரியவர்கள்.
וְהָיָה עֶרְכְּךָ הַזָּכָר מִבֶּן עֶשְׂרִים שָׁנָה וְעַד בֶּן־שִׁשִּׁים שָׁנָה וְהָיָה עֶרְכְּךָ חֲמִשִּׁים שֶׁקֶל כֶּסֶף בְּשֶׁקֶל הַקֹּֽדֶשׁ׃ | 3 |
௩இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
וְאִם־נְקֵבָה הִוא וְהָיָה עֶרְכְּךָ שְׁלֹשִׁים שָֽׁקֶל׃ | 4 |
௪பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
וְאִם מִבֶּן־חָמֵשׁ שָׁנִים וְעַד בֶּן־עֶשְׂרִים שָׁנָה וְהָיָה עֶרְכְּךָ הַזָּכָר עֶשְׂרִים שְׁקָלִים וְלַנְּקֵבָה עֲשֶׂרֶת שְׁקָלִֽים׃ | 5 |
௫ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
וְאִם מִבֶּן־חֹדֶשׁ וְעַד בֶּן־חָמֵשׁ שָׁנִים וְהָיָה עֶרְכְּךָ הַזָּכָר חֲמִשָּׁה שְׁקָלִים כָּסֶף וְלַנְּקֵבָה עֶרְכְּךָ שְׁלֹשֶׁת שְׁקָלִים כָּֽסֶף׃ | 6 |
௬ஒரு மாதம்முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,
וְאִם מִבֶּן־שִׁשִּׁים שָׁנָה וָמַעְלָה אִם־זָכָר וְהָיָה עֶרְכְּךָ חֲמִשָּׁה עָשָׂר שָׁקֶל וְלַנְּקֵבָה עֲשָׂרָה שְׁקָלִֽים׃ | 7 |
௭அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்களைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
וְאִם־מָךְ הוּא מֵֽעֶרְכֶּךָ וְהֶֽעֱמִידוֹ לִפְנֵי הַכֹּהֵן וְהֶעֱרִיךְ אֹתוֹ הַכֹּהֵן עַל־פִּי אֲשֶׁר תַּשִּׂיג יַד הַנֹּדֵר יַעֲרִיכֶנּוּ הַכֹּהֵֽן׃ | 8 |
௮உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
וְאִם־בְּהֵמָה אֲשֶׁר יַקְרִיבוּ מִמֶּנָּה קׇרְבָּן לַֽיהֹוָה כֹּל אֲשֶׁר יִתֵּן מִמֶּנּוּ לַיהֹוָה יִֽהְיֶה־קֹּֽדֶשׁ׃ | 9 |
௯“ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.
לֹא יַחֲלִיפֶנּוּ וְלֹֽא־יָמִיר אֹתוֹ טוֹב בְּרָע אוֹ־רַע בְּטוֹב וְאִם־הָמֵר יָמִיר בְּהֵמָה בִּבְהֵמָה וְהָֽיָה־הוּא וּתְמוּרָתוֹ יִֽהְיֶה־קֹּֽדֶשׁ׃ | 10 |
௧0அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளைத்துப்போனதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாக இருப்பதாக.
וְאִם כׇּל־בְּהֵמָה טְמֵאָה אֲשֶׁר לֹא־יַקְרִיבוּ מִמֶּנָּה קׇרְבָּן לַֽיהֹוָה וְהֶֽעֱמִיד אֶת־הַבְּהֵמָה לִפְנֵי הַכֹּהֵֽן׃ | 11 |
௧௧அது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
וְהֶעֱרִיךְ הַכֹּהֵן אֹתָהּ בֵּין טוֹב וּבֵין רָע כְּעֶרְכְּךָ הַכֹּהֵן כֵּן יִהְיֶֽה׃ | 12 |
௧௨ஆசாரியன் அது நல்லதானாலும் இளைத்ததானாலும் அதை மதிப்பீடு செய்வானாக; உன் மதிப்பின்படியே இருப்பதாக.
וְאִם־גָּאֹל יִגְאָלֶנָּה וְיָסַף חֲמִישִׁתוֹ עַל־עֶרְכֶּֽךָ׃ | 13 |
௧௩அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
וְאִישׁ כִּֽי־יַקְדִּשׁ אֶת־בֵּיתוֹ קֹדֶשׁ לַֽיהֹוָה וְהֶעֱרִיכוֹ הַכֹּהֵן בֵּין טוֹב וּבֵין רָע כַּאֲשֶׁר יַעֲרִיךְ אֹתוֹ הַכֹּהֵן כֵּן יָקֽוּם׃ | 14 |
௧௪“ஒருவன் தன் வீட்டைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்திற்கும், நிலைமைக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருப்பதாக.
וְאִם־הַמַּקְדִּישׁ יִגְאַל אֶת־בֵּיתוֹ וְיָסַף חֲמִישִׁית כֶּֽסֶף־עֶרְכְּךָ עָלָיו וְהָיָה לֽוֹ׃ | 15 |
௧௫தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
וְאִם ׀ מִשְּׂדֵה אֲחֻזָּתוֹ יַקְדִּישׁ אִישׁ לַֽיהֹוָה וְהָיָה עֶרְכְּךָ לְפִי זַרְעוֹ זֶרַע חֹמֶר שְׂעֹרִים בַּחֲמִשִּׁים שֶׁקֶל כָּֽסֶף׃ | 16 |
௧௬“ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
אִם־מִשְּׁנַת הַיֹּבֵל יַקְדִּישׁ שָׂדֵהוּ כְּעֶרְכְּךָ יָקֽוּם׃ | 17 |
௧௭யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
וְאִם־אַחַר הַיֹּבֵל יַקְדִּישׁ שָׂדֵהוּ וְחִשַּׁב־לוֹ הַכֹּהֵן אֶת־הַכֶּסֶף עַל־פִּי הַשָּׁנִים הַנּוֹתָרֹת עַד שְׁנַת הַיֹּבֵל וְנִגְרַע מֵֽעֶרְכֶּֽךָ׃ | 18 |
௧௮யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.
וְאִם־גָּאֹל יִגְאַל אֶת־הַשָּׂדֶה הַמַּקְדִּישׁ אֹתוֹ וְיָסַף חֲמִשִׁית כֶּֽסֶף־עֶרְכְּךָ עָלָיו וְקָם לֽוֹ׃ | 19 |
௧௯வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
וְאִם־לֹא יִגְאַל אֶת־הַשָּׂדֶה וְאִם־מָכַר אֶת־הַשָּׂדֶה לְאִישׁ אַחֵר לֹא יִגָּאֵל עֽוֹד׃ | 20 |
௨0அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
וְהָיָה הַשָּׂדֶה בְּצֵאתוֹ בַיֹּבֵל קֹדֶשׁ לַֽיהֹוָה כִּשְׂדֵה הַחֵרֶם לַכֹּהֵן תִּהְיֶה אֲחֻזָּתֽוֹ׃ | 21 |
௨௧யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.
וְאִם אֶת־שְׂדֵה מִקְנָתוֹ אֲשֶׁר לֹא מִשְּׂדֵה אֲחֻזָּתוֹ יַקְדִּישׁ לַֽיהֹוָֽה׃ | 22 |
௨௨ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
וְחִשַּׁב־לוֹ הַכֹּהֵן אֵת מִכְסַת הָֽעֶרְכְּךָ עַד שְׁנַת הַיֹּבֵל וְנָתַן אֶת־הָעֶרְכְּךָ בַּיּוֹם הַהוּא קֹדֶשׁ לַיהֹוָֽה׃ | 23 |
௨௩அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
בִּשְׁנַת הַיּוֹבֵל יָשׁוּב הַשָּׂדֶה לַאֲשֶׁר קָנָהוּ מֵאִתּוֹ לַאֲשֶׁר־לוֹ אֲחֻזַּת הָאָֽרֶץ׃ | 24 |
௨௪யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
וְכׇל־עֶרְכְּךָ יִהְיֶה בְּשֶׁקֶל הַקֹּדֶשׁ עֶשְׂרִים גֵּרָה יִהְיֶה הַשָּֽׁקֶל׃ | 25 |
௨௫உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
אַךְ־בְּכוֹר אֲשֶׁר־יְבֻכַּר לַֽיהֹוָה בִּבְהֵמָה לֹֽא־יַקְדִּישׁ אִישׁ אֹתוֹ אִם־שׁוֹר אִם־שֶׂה לַֽיהֹוָה הֽוּא׃ | 26 |
௨௬“முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.
וְאִם בַּבְּהֵמָה הַטְּמֵאָה וּפָדָה בְעֶרְכֶּךָ וְיָסַף חֲמִשִׁתוֹ עָלָיו וְאִם־לֹא יִגָּאֵל וְנִמְכַּר בְּעֶרְכֶּֽךָ׃ | 27 |
௨௭சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
אַךְ־כׇּל־חֵרֶם אֲשֶׁר יַחֲרִם אִישׁ לַֽיהֹוָה מִכׇּל־אֲשֶׁר־לוֹ מֵאָדָם וּבְהֵמָה וּמִשְּׂדֵה אֲחֻזָּתוֹ לֹא יִמָּכֵר וְלֹא יִגָּאֵל כׇּל־חֵרֶם קֹֽדֶשׁ־קׇדָשִׁים הוּא לַיהֹוָֽה׃ | 28 |
௨௮“ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.
כׇּל־חֵרֶם אֲשֶׁר יׇחֳרַם מִן־הָאָדָם לֹא יִפָּדֶה מוֹת יוּמָֽת׃ | 29 |
௨௯மனிதர்களில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவர்களெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
וְכׇל־מַעְשַׂר הָאָרֶץ מִזֶּרַע הָאָרֶץ מִפְּרִי הָעֵץ לַיהֹוָה הוּא קֹדֶשׁ לַֽיהֹוָֽה׃ | 30 |
௩0“தேசத்திலே நிலத்தின் வித்திலும், மரங்களின் பழங்களிலும், தசமபாகம் எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
וְאִם־גָּאֹל יִגְאַל אִישׁ מִמַּֽעַשְׂרוֹ חֲמִשִׁיתוֹ יֹסֵף עָלָֽיו׃ | 31 |
௩௧ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
וְכׇל־מַעְשַׂר בָּקָר וָצֹאן כֹּל אֲשֶׁר־יַעֲבֹר תַּחַת הַשָּׁבֶט הָֽעֲשִׂירִי יִֽהְיֶה־קֹּדֶשׁ לַֽיהֹוָֽה׃ | 32 |
௩௨மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
לֹא יְבַקֵּר בֵּֽין־טוֹב לָרַע וְלֹא יְמִירֶנּוּ וְאִם־הָמֵר יְמִירֶנּוּ וְהָֽיָה־הוּא וּתְמוּרָתוֹ יִֽהְיֶה־קֹּדֶשׁ לֹא יִגָּאֵֽל׃ | 33 |
௩௩அது நல்லதோ குறைபாடுள்ளதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல்” என்றார்.
אֵלֶּה הַמִּצְוֺת אֲשֶׁר צִוָּה יְהֹוָה אֶת־מֹשֶׁה אֶל־בְּנֵי יִשְׂרָאֵל בְּהַר סִינָֽי׃ | 34 |
௩௪இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி யெகோவா சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.