< תהילים 81 >
למנצח על-הגתית לאסף ב הרנינו לאלהים עוזנו הריעו לאלהי יעקב | 1 |
௧கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
שאו-זמרה ותנו-תף כנור נעים עם-נבל | 2 |
௨தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள்.
תקעו בחדש שופר בכסה ליום חגנו | 3 |
௩மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
כי חק לישראל הוא משפט לאלהי יעקב | 4 |
௪இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
עדות ביהוסף שמו-- בצאתו על-ארץ מצרים שפת לא-ידעתי אשמע | 5 |
௫நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
הסירותי מסבל שכמו כפיו מדוד תעברנה | 6 |
௬அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
בצרה קראת ואחלצך אענך בסתר רעם אבחנך על-מי מריבה סלה | 7 |
௭நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
שמע עמי ואעידה בך ישראל אם-תשמע-לי | 8 |
௮என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
לא-יהיה בך אל זר ולא תשתחוה לאל נכר | 9 |
௯உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
אנכי יהוה אלהיך-- המעלך מארץ מצרים הרחב-פיך ואמלאהו | 10 |
௧0உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
ולא-שמע עמי לקולי וישראל לא-אבה לי | 11 |
௧௧என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
ואשלחהו בשרירות לבם ילכו במועצותיהם | 12 |
௧௨ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
לו--עמי שמע לי ישראל בדרכי יהלכו | 13 |
௧௩ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
כמעט אויביהם אכניע ועל צריהם אשיב ידי | 14 |
௧௪நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
משנאי יהוה יכחשו-לו ויהי עתם לעולם | 15 |
௧௫அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
ויאכילהו מחלב חטה ומצור דבש אשביעך | 16 |
௧௬செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.