< תהילים 71 >
בך-יהוה חסיתי אל-אבושה לעולם | 1 |
௧யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
בצדקתך תצילני ותפלטני הטה-אלי אזנך והושיעני | 2 |
௨உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
היה לי לצור מעון לבוא-- תמיד צוית להושיעני כי-סלעי ומצודתי אתה | 3 |
௩நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.
אלהי--פלטני מיד רשע מכף מעול וחומץ | 4 |
௪என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
כי-אתה תקותי אדני יהוה מבטחי מנעורי | 5 |
௫யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர்.
עליך נסמכתי מבטן--ממעי אמי אתה גוזי בך תהלתי תמיד | 6 |
௬நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
כמופת הייתי לרבים ואתה מחסי-עז | 7 |
௭அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
ימלא פי תהלתך כל-היום תפארתך | 8 |
௮என்னுடைய வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
אל-תשליכני לעת זקנה ככלות כחי אל-תעזבני | 9 |
௯முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
כי-אמרו אויבי לי ושמרי נפשי נועצו יחדו | 10 |
௧0என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
לאמר אלהים עזבו רדפו ותפשוהו כי-אין מציל | 11 |
௧௧தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
אלהים אל-תרחק ממני אלהי לעזרתי חישה (חושה) | 12 |
௧௨தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
יבשו יכלו שטני נפשי יעטו חרפה וכלמה--מבקשי רעתי | 13 |
௧௩என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும்.
ואני תמיד איחל והוספתי על-כל-תהלתך | 14 |
௧௪நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
פי יספר צדקתך--כל-היום תשועתך כי לא ידעתי ספרות | 15 |
௧௫என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை.
אבוא--בגברות אדני יהוה אזכיר צדקתך לבדך | 16 |
௧௬யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
אלהים למדתני מנעורי ועד-הנה אגיד נפלאותיך | 17 |
௧௭தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
וגם עד-זקנה ושיבה-- אלהים אל-תעזבני עד-אגיד זרועך לדור לכל-יבוא גבורתך | 18 |
௧௮இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.
וצדקתך אלהים עד-מרום אשר-עשית גדלות אלהים מי כמוך | 19 |
௧௯தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
אשר הראיתנו (הראיתני) צרות רבות-- ורעות תשוב תחינו (תחיני) ומתהמות הארץ תשוב תעלני | 20 |
௨0அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
௨௧என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
גם-אני אודך בכלי-נבל-- אמתך אלהי אזמרה לך בכנור-- קדוש ישראל | 22 |
௨௨என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
תרננה שפתי כי אזמרה-לך ונפשי אשר פדית | 23 |
௨௩நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
גם-לשוני-- כל-היום תהגה צדקתך כי-בשו כי-חפרו מבקשי רעתי | 24 |
௨௪எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.