< תהילים 64 >
למנצח מזמור לדוד ב שמע-אלהים קולי בשיחי מפחד אויב תצר חיי | 1 |
௧இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
תסתירני מסוד מרעים מרגשת פעלי און | 2 |
௨துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
אשר שננו כחרב לשונם דרכו חצם דבר מר | 3 |
௩அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
לירת במסתרים תם פתאם ירהו ולא ייראו | 4 |
௪மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
יחזקו-למו דבר רע-- יספרו לטמון מוקשים אמרו מי יראה-למו | 5 |
௫அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
יחפשו עולת-- תמנו חפש מחפש וקרב איש ולב עמק | 6 |
௬அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
וירם אלהים חץ פתאום--היו מכותם | 7 |
௭ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
ויכשילוהו עלימו לשונם יתנדדו כל-ראה בם | 8 |
௮அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
וייראו כל-אדם ויגידו פעל אלהים ומעשהו השכילו | 9 |
௯எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
ישמח צדיק ביהוה וחסה בו ויתהללו כל-ישרי-לב | 10 |
௧0நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.