< תהילים 145 >
תהלה לדוד ארוממך אלוהי המלך ואברכה שמך לעולם ועד | 1 |
௧தாவீதின் நன்றிப்பாடல். ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
בכל-יום אברכך ואהללה שמך לעולם ועד | 2 |
௨நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
גדול יהוה ומהלל מאד ולגדלתו אין חקר | 3 |
௩யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
דור לדור ישבח מעשיך וגבורתיך יגידו | 4 |
௪தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
הדר כבוד הודך-- ודברי נפלאתיך אשיחה | 5 |
௫உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
ועזוז נוראתיך יאמרו וגדלותיך (וגדלתך) אספרנה | 6 |
௬மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
זכר רב-טובך יביעו וצדקתך ירננו | 7 |
௭அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
חנון ורחום יהוה ארך אפים וגדל-חסד | 8 |
௮யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
טוב-יהוה לכל ורחמיו על-כל-מעשיו | 9 |
௯யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
יודוך יהוה כל-מעשיך וחסידיך יברכוכה | 10 |
௧0யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
כבוד מלכותך יאמרו וגבורתך ידברו | 11 |
௧௧மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
להודיע לבני האדם--גבורתיו וכבוד הדר מלכותו | 12 |
௧௨உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
מלכותך מלכות כל-עלמים וממשלתך בכל-דור ודר | 13 |
௧௩உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
סומך יהוה לכל-הנפלים וזוקף לכל-הכפופים | 14 |
௧௪யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
עיני-כל אליך ישברו ואתה נותן-להם את-אכלם בעתו | 15 |
௧௫எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
פותח את-ידך ומשביע לכל-חי רצון | 16 |
௧௬நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
צדיק יהוה בכל-דרכיו וחסיד בכל-מעשיו | 17 |
௧௭யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
קרוב יהוה לכל-קראיו-- לכל אשר יקראהו באמת | 18 |
௧௮தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.
רצון-יראיו יעשה ואת-שועתם ישמע ויושיעם | 19 |
௧௯அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.
שומר יהוה את-כל-אהביו ואת כל-הרשעים ישמיד | 20 |
௨0யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
תהלת יהוה ידבר-פי ויברך כל-בשר שם קדשו--לעולם ועד | 21 |
௨௧என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.