< תהילים 127 >
שיר המעלות לשלמה אם-יהוה לא-יבנה בית-- שוא עמלו בוניו בו אם-יהוה לא-ישמר-עיר שוא שקד שומר | 1 |
௧சாலொமோனின் ஆரோகண பாடல். யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
שוא לכם משכימי קום מאחרי-שבת-- אכלי לחם העצבים כן יתן לידידו שנא | 2 |
௨நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
הנה נחלת יהוה בנים שכר פרי הבטן | 3 |
௩இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
כחצים ביד-גבור-- כן בני הנעורים | 4 |
௪இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
אשרי הגבר-- אשר מלא את-אשפתו מהם לא-יבשו-- כי-ידברו את-אויבים בשער | 5 |
௫அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.