< תהילים 123 >
שיר המעלות אליך נשאתי את-עיני-- הישבי בשמים | 1 |
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.
הנה כעיני עבדים אל-יד אדוניהם-- כעיני שפחה אל-יד גברתה כן עינינו אל-יהוה אלהינו-- עד שיחננו | 2 |
அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும், எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை, அவரையே நோக்கிப்பார்க்கின்றன.
חננו יהוה חננו כי-רב שבענו בוז | 3 |
எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்; அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.
רבת שבעה-לה נפשנו הלעג השאננים הבוז לגאיונים (לגאי יונים) | 4 |
பெருமைக்காரரின் ஏளனத்தையும், அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும் நாங்கள் சகித்துக்கொண்டோம்.