< תהילים 113 >
הללו-יה הללו עבדי יהוה הללו את-שם יהוה | 1 |
௧அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
יהי שם יהוה מברך-- מעתה ועד-עולם | 2 |
௨இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
ממזרח-שמש עד-מבואו-- מהלל שם יהוה | 3 |
௩சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
רם על-כל-גוים יהוה על השמים כבודו | 4 |
௪யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
מי כיהוה אלהינו-- המגביהי לשבת | 5 |
௫உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
המשפילי לראות-- בשמים ובארץ | 6 |
௬அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
מקימי מעפר דל מאשפת ירים אביון | 7 |
௭அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
להושיבי עם-נדיבים עם נדיבי עמו | 8 |
௮அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
מושיבי עקרת הבית-- אם-הבנים שמחה הללו-יה | 9 |
௯மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.