< תהילים 105 >
הודו ליהוה קראו בשמו הודיעו בעמים עלילותיו | 1 |
௧யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
שירו-לו זמרו-לו שיחו בכל-נפלאותיו | 2 |
௨அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
התהללו בשם קדשו ישמח לב מבקשי יהוה | 3 |
௩அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
דרשו יהוה ועזו בקשו פניו תמיד | 4 |
௪யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.
זכרו--נפלאותיו אשר-עשה מפתיו ומשפטי-פיו | 5 |
௫அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
זרע אברהם עבדו בני יעקב בחיריו | 6 |
௬அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
הוא יהוה אלהינו בכל-הארץ משפטיו | 7 |
௭அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
זכר לעולם בריתו דבר צוה לאלף דור | 8 |
௮ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
אשר כרת את-אברהם ושבועתו לישחק | 9 |
௯அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
ויעמידה ליעקב לחק לישראל ברית עולם | 10 |
௧0அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
לאמר--לך אתן את-ארץ-כנען חבל נחלתכם | 11 |
௧௧உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
בהיותם מתי מספר כמעט וגרים בה | 12 |
௧௨அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
ויתהלכו מגוי אל-גוי מממלכה אל-עם אחר | 13 |
௧௩அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
לא-הניח אדם לעשקם ויוכח עליהם מלכים | 14 |
௧௪அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
אל-תגעו במשיחי ולנביאי אל-תרעו | 15 |
௧௫நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
ויקרא רעב על-הארץ כל-מטה-לחם שבר | 16 |
௧௬அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
שלח לפניהם איש לעבד נמכר יוסף | 17 |
௧௭அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
ענו בכבל רגליו (רגלו) ברזל באה נפשו | 18 |
௧௮அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
עד-עת בא-דברו-- אמרת יהוה צרפתהו | 19 |
௧௯யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
שלח מלך ויתירהו משל עמים ויפתחהו | 20 |
௨0ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
שמו אדון לביתו ומשל בכל-קנינו | 21 |
௨௧தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
לאסר שריו בנפשו וזקניו יחכם | 22 |
௨௨அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.
ויבא ישראל מצרים ויעקב גר בארץ-חם | 23 |
௨௩அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
ויפר את-עמו מאד ויעצמהו מצריו | 24 |
௨௪அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.
הפך לבם לשנא עמו להתנכל בעבדיו | 25 |
௨௫தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
שלח משה עבדו אהרן אשר בחר-בו | 26 |
௨௬தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
שמו-בם דברי אתותיו ומפתים בארץ חם | 27 |
௨௭இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
שלח חשך ויחשך ולא-מרו את-דבריו (דברו) | 28 |
௨௮அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.
הפך את-מימיהם לדם וימת את-דגתם | 29 |
௨௯அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
שרץ ארצם צפרדעים בחדרי מלכיהם | 30 |
௩0அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
אמר ויבא ערב כנים בכל-גבולם | 31 |
௩௧அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
נתן גשמיהם ברד אש להבות בארצם | 32 |
௩௨அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.
ויך גפנם ותאנתם וישבר עץ גבולם | 33 |
௩௩அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
אמר ויבא ארבה וילק ואין מספר | 34 |
௩௪அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
ויאכל כל-עשב בארצם ויאכל פרי אדמתם | 35 |
௩௫அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
ויך כל-בכור בארצם ראשית לכל-אונם | 36 |
௩௬அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
ויוציאם בכסף וזהב ואין בשבטיו כושל | 37 |
௩௭அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
שמח מצרים בצאתם כי-נפל פחדם עליהם | 38 |
௩௮எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
פרש ענן למסך ואש להאיר לילה | 39 |
௩௯அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
שאל ויבא שלו ולחם שמים ישביעם | 40 |
௪0இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
פתח צור ויזובו מים הלכו בציות נהר | 41 |
௪௧கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
כי-זכר את-דבר קדשו את-אברהם עבדו | 42 |
௪௨அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
ויוצא עמו בששון ברנה את-בחיריו | 43 |
௪௩தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,
ויתן להם ארצות גוים ועמל לאמים יירשו | 44 |
௪௪தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
בעבור ישמרו חקיו-- ותורתיו ינצרו הללו-יה | 45 |
௪௫அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.