< תהילים 1 >

אשרי האיש-- אשר לא הלך בעצת רשעים ובדרך חטאים לא עמד ובמושב לצים לא ישב 1
தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரருடன் உட்காராமல்,
כי אם בתורת יהוה חפצו ובתורתו יהגה יומם ולילה 2
யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.
והיה-- כעץ שתול על-פלגי-מים אשר פריו יתן בעתו--ועלהו לא-יבול וכל אשר-יעשה יצליח 3
அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு, பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து, இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார். அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.
לא-כן הרשעים כי אם-כמץ אשר-תדפנו רוח 4
தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
על-כן לא-יקמו רשעים--במשפט וחטאים בעדת צדיקים 5
ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
כי-יודע יהוה דרך צדיקים ודרך רשעים תאבד 6
ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.

< תהילים 1 >