< מִשְׁלֵי 9 >
חכמות בנתה ביתה חצבה עמודיה שבעה | 1 |
௧ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
טבחה טבחה מסכה יינה אף ערכה שלחנה | 2 |
௨தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
שלחה נערתיה תקרא-- על-גפי מרמי קרת | 3 |
௩தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
מי-פתי יסר הנה חסר-לב אמרה לו | 4 |
௪புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
לכו לחמו בלחמי ושתו ביין מסכתי | 5 |
௫நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
עזבו פתאים וחיו ואשרו בדרך בינה | 6 |
௬பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
יסר לץ--לקח לו קלון ומוכיח לרשע מומו | 7 |
௭பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
אל-תוכח לץ פן-ישנאך הוכח לחכם ויאהבך | 8 |
௮பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
תן לחכם ויחכם-עוד הודע לצדיק ויוסף לקח | 9 |
௯ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
תחלת חכמה יראת יהוה ודעת קדשים בינה | 10 |
௧0யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
כי-בי ירבו ימיך ויוסיפו לך שנות חיים | 11 |
௧௧என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
אם-חכמת חכמת לך ולצת לבדך תשא | 12 |
௧௨நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
אשת כסילות המיה פתיות ובל-ידעה מה | 13 |
௧௩மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
וישבה לפתח ביתה-- על-כסא מרמי קרת | 14 |
௧௪அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
לקרא לעברי-דרך המישרים ארחותם | 15 |
௧௫தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
מי-פתי יסר הנה וחסר-לב ואמרה לו | 16 |
௧௬எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
מים-גנובים ימתקו ולחם סתרים ינעם | 17 |
௧௭மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
ולא-ידע כי-רפאים שם בעמקי שאול קראיה (Sheol ) | 18 |
௧௮இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol )