< מִשְׁלֵי 3 >
בני תורתי אל-תשכח ומצותי יצר לבך | 1 |
௧என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.
כי ארך ימים ושנות חיים-- ושלום יוסיפו לך | 2 |
௨அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.
חסד ואמת אל-יעזבך קשרם על-גרגרותיך כתבם על-לוח לבך | 3 |
௩கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
ומצא-חן ושכל-טוב-- בעיני אלהים ואדם | 4 |
௪அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
בטח אל-יהוה בכל-לבך ואל-בינתך אל-תשען | 5 |
௫உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
בכל-דרכיך דעהו והוא יישר ארחתיך | 6 |
௬உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
אל-תהי חכם בעיניך ירא את-יהוה וסור מרע | 7 |
௭நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
רפאות תהי לשרך ושקוי לעצמותיך | 8 |
௮அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.
כבד את-יהוה מהונך ומראשית כל-תבואתך | 9 |
௯உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
וימלאו אסמיך שבע ותירוש יקביך יפרצו | 10 |
௧0அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
מוסר יהוה בני אל-תמאס ואל-תקץ בתוכחתו | 11 |
௧௧என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
כי את אשר יאהב יהוה יוכיח וכאב את-בן ירצה | 12 |
௧௨தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
אשרי אדם מצא חכמה ואדם יפיק תבונה | 13 |
௧௩ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
כי טוב סחרה מסחר-כסף ומחרוץ תבואתה | 14 |
௧௪அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
יקרה היא מפניים (מפנינים) וכל-חפציך לא ישוו-בה | 15 |
௧௫முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.
ארך ימים בימינה בשמאולה עשר וכבוד | 16 |
௧௬அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
דרכיה דרכי-נעם וכל-נתיבותיה שלום | 17 |
௧௭அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
עץ-חיים היא למחזיקים בה ותמכיה מאשר | 18 |
௧௮அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
יהוה--בחכמה יסד-ארץ כונן שמים בתבונה | 19 |
௧௯யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.
בדעתו תהומות נבקעו ושחקים ירעפו-טל | 20 |
௨0அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
בני אל-ילזו מעיניך נצר תשיה ומזמה | 21 |
௨௧என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.
ויהיו חיים לנפשך וחן לגרגרתיך | 22 |
௨௨அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
אז תלך לבטח דרכך ורגלך לא תגוף | 23 |
௨௩அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், உன்னுடைய கால் இடறாது.
אם-תשכב לא-תפחד ושכבת וערבה שנתך | 24 |
௨௪நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
אל-תירא מפחד פתאם ומשאת רשעים כי תבא | 25 |
௨௫திடீரென வரும் திகிலும், துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.
כי-יהוה יהיה בכסלך ושמר רגלך מלכד | 26 |
௨௬யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
אל-תמנע-טוב מבעליו-- בהיות לאל ידיך (ידך) לעשות | 27 |
௨௭நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
אל-תאמר לרעיך (לרעך) לך ושוב--ומחר אתן ויש אתך | 28 |
௨௮உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
אל-תחרש על-רעך רעה והוא-יושב לבטח אתך | 29 |
௨௯பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
אל-תרוב (תריב) עם-אדם חנם-- אם-לא גמלך רעה | 30 |
௩0ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
אל-תקנא באיש חמס ואל-תבחר בכל-דרכיו | 31 |
௩௧கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
כי תועבת יהוה נלוז ואת-ישרים סודו | 32 |
௩௨மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
מארת יהוה בבית רשע ונוה צדיקים יברך | 33 |
௩௩துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
אם-ללצים הוא-יליץ ולעניים (ולענוים) יתן-חן | 34 |
௩௪இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
כבוד חכמים ינחלו וכסילים מרים קלון | 35 |
௩௫ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.