< מִשְׁלֵי 26 >
כשלג בקיץ--וכמטר בקציר כן לא-נאוה לכסיל כבוד | 1 |
கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது.
כצפור לנוד כדרור לעוף-- כן קללת חנם לא (לו) תבא | 2 |
சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது.
שוט לסוס מתג לחמור ושבט לגו כסילים | 3 |
குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது.
אל-תען כסיל כאולתו פן-תשוה-לו גם-אתה | 4 |
மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய்.
ענה כסיל כאולתו פן-יהיה חכם בעיניו | 5 |
மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்.
מקצה רגלים חמס שתה-- שלח דברים ביד-כסיל | 6 |
மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும்.
דליו שקים מפסח ומשל בפי כסילים | 7 |
மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும்.
כצרור אבן במרגמה-- כן-נותן לכסיל כבוד | 8 |
மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும்.
חוח עלה ביד-שכור ומשל בפי כסילים | 9 |
மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும்.
רב מחולל-כל ושכר כסיל ושכר עברים | 10 |
மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான்.
ככלב שב על-קאו-- כסיל שונה באולתו | 11 |
நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள்.
ראית--איש חכם בעיניו תקוה לכסיל ממנו | 12 |
தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம்.
אמר עצל שחל בדרך ארי בין הרחבות | 13 |
“வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான்.
הדלת תסוב על-צירה ועצל על-מטתו | 14 |
ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான்.
טמן עצל ידו בצלחת נלאה להשיבה אל-פיו | 15 |
சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள்.
חכם עצל בעיניו-- משבעה משיבי טעם | 16 |
விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான்.
מחזיק באזני-כלב-- עבר מתעבר על-ריב לא-לו | 17 |
வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
כמתלהלה הירה זקים-- חצים ומות | 18 |
தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே,
כן-איש רמה את-רעהו ואמר הלא-משחק אני | 19 |
தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான்.
באפס עצים תכבה-אש ובאין נרגן ישתק מדון | 20 |
விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும்.
פחם לגחלים ועצים לאש ואיש מדונים (מדינים) לחרחר-ריב | 21 |
தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை.
דברי נרגן כמתלהמים והם ירדו חדרי-בטן | 22 |
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
כסף סיגים מצפה על-חרש-- שפתים דלקים ולב-רע | 23 |
தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது.
בשפתו ינכר שונא ובקרבו ישית מרמה | 24 |
தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான்.
כי-יחנן קולו אל-תאמן-בו כי שבע תועבות בלבו | 25 |
அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது.
תכסה שנאה במשאון תגלה רעתו בקהל | 26 |
அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும்.
כרה-שחת בה יפול וגולל אבן אליו תשוב | 27 |
ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும்.
לשון-שקר ישנא דכיו ופה חלק יעשה מדחה | 28 |
பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.