< מִשְׁלֵי 2 >
בני אם-תקח אמרי ומצותי תצפן אתך | 1 |
௧என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,
להקשיב לחכמה אזנך תטה לבך לתבונה | 2 |
௨நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
כי אם לבינה תקרא לתבונה תתן קולך | 3 |
௩ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
אם-תבקשנה ככסף וכמטמונים תחפשנה | 4 |
௪அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,
אז--תבין יראת יהוה ודעת אלהים תמצא | 5 |
௫அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
כי-יהוה יתן חכמה מפיו דעת ותבונה | 6 |
௬யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
וצפן (יצפן) לישרים תושיה מגן להלכי תם | 7 |
௭அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
לנצר ארחות משפט ודרך חסידו ישמר | 8 |
௮அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
אז--תבין צדק ומשפט ומישרים כל-מעגל-טוב | 9 |
௯அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
כי-תבוא חכמה בלבך ודעת לנפשך ינעם | 10 |
௧0ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,
מזמה תשמר עליך תבונה תנצרכה | 11 |
௧௧நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
להצילך מדרך רע מאיש מדבר תהפכות | 12 |
௧௨அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,
העזבים ארחות ישר-- ללכת בדרכי-חשך | 13 |
௧௩இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
השמחים לעשות רע יגילו בתהפכות רע | 14 |
௧௪தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
אשר ארחתיהם עקשים ונלוזים במעגלותם | 15 |
௧௫மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
להצילך מאשה זרה מנכריה אמריה החליקה | 16 |
௧௬தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
העזבת אלוף נעוריה ואת-ברית אלהיה שכחה | 17 |
௧௭ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.
כי שחה אל-מות ביתה ואל-רפאים מעגלתיה | 18 |
௧௮அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.
כל-באיה לא ישובון ולא-ישיגו ארחות חיים | 19 |
௧௯அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
למען--תלך בדרך טובים וארחות צדיקים תשמר | 20 |
௨0ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.
כי-ישרים ישכנו-ארץ ותמימים יותרו בה | 21 |
௨௧நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
ורשעים מארץ יכרתו ובוגדים יסחו ממנה | 22 |
௨௨துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.