< מִשְׁלֵי 18 >
לתאוה יבקש נפרד בכל-תושיה יתגלע | 1 |
நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.
לא-יחפץ כסיל בתבונה כי אם-בהתגלות לבו | 2 |
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
בבוא-רשע בא גם-בוז ועם-קלון חרפה | 3 |
கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், வெட்கத்துடன் அவமானமும் வரும்.
מים עמקים דברי פי-איש נחל נבע מקור חכמה | 4 |
வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.
שאת פני-רשע לא-טוב-- להטות צדיק במשפט | 5 |
கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.
שפתי כסיל יבאו בריב ופיו למהלמות יקרא | 6 |
மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
פי-כסיל מחתה-לו ושפתיו מוקש נפשו | 7 |
மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.
דברי נרגן כמתלהמים והם ירדו חדרי-בטן | 8 |
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
גם מתרפה במלאכתו-- אח הוא לבעל משחית | 9 |
தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன்.
מגדל-עז שם יהוה בו-ירוץ צדיק ונשגב | 10 |
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
הון עשיר קרית עזו וכחומה נשגבה במשכתו | 11 |
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
לפני-שבר יגבה לב-איש ולפני כבוד ענוה | 12 |
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
משיב דבר בטרם ישמע-- אולת היא-לו וכלמה | 13 |
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
רוח-איש יכלכל מחלהו ורוח נכאה מי ישאנה | 14 |
மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?
לב נבון יקנה-דעת ואזן חכמים תבקש-דעת | 15 |
பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.
מתן אדם ירחיב לו ולפני גדלים ינחנו | 16 |
அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது.
צדיק הראשון בריבו יבא- (ובא-) רעהו וחקרו | 17 |
வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.
מדינים ישבית הגורל ובין עצומים יפריד | 18 |
சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும்.
אח--נפשע מקרית-עז ומדונים (ומדינים) כבריח ארמון | 19 |
அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.
מפרי פי-איש תשבע בטנו תבואת שפתיו ישבע | 20 |
அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.
מות וחיים ביד-לשון ואהביה יאכל פריה | 21 |
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
מצא אשה מצא טוב ויפק רצון מיהוה | 22 |
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
תחנונים ידבר-רש ועשיר יענה עזות | 23 |
ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.
איש רעים להתרעע ויש אהב דבק מאח | 24 |
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.